------------------------------------
‘இலக்கை அடையும் வரை போராடு’ நூல் வெளியீட்டு விழா 25.07.2026 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப்பின் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜனாப் G.M. அக்பர் அலி அவர்களின் தலைமையில் மண்ணடியிலுள்ள ‘சென்னை பேலஸ்’ ஹோட்டலில் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மருத்துவ அணிச் செயலாளர் மௌலவி அப்துர் ரஹ்மான் ஸஆதி கிராஅத் ஓதி இந்நிகழ்வைத் தொடங்கிவைத்தார்.
இனிய திசைகள் மாத இதழ் பொறுப்பாசிரியரும் பட்டினம்பாக்கம் மதீனா மஸ்ஜிதின் இமாமும் இந்நூலின் மேலாய்வாளருமான மௌலவி டாக்டர் நூ. அப்துல் ஹாதி பாகவி வரவேற்புரை, நூல் அறிமுக உரை ஆற்றியதோடு, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பாட்ரீஷியன் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் இரா. இளையராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதல் பெண் மாநகராட்சி கவுன்சிலர் திருமதி ஃபாத்திமா முஸஃப்பர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாண்புமிகு நீதிபதி ஜனாப் G.M. அக்பர் அலி நூலை வெளியிட, மூத்த வழக்கறிஞரும் மாமன்ற முன்னாள் உறுப்பினருமான வேலன் முதல் பிரதியையும் ஜனாப் எம். தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ. நூலை வெளியிட, ஷிஃபா மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் அஜ்மல் இரண்டாம் பிரதியையும், நூலாசிரியர் Dr. A.P.முஹம்மது அலி IPS நூலை வெளியிட, மூத்த வழக்கறிஞர் பாரிவேந்தன் மூன்றாம் பிரதியையும் பெற்றுக்கொண்டனர். பிறகு மனிதநேய ஜனநாயகக் கட்சி நிறுவனர் ஜனாப் எம். தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ. சிறப்புரை நிகழ்த்தியதைத் தொடர்ந்து, மாண்புமிகு நீதிபதி ஜனாப் G.M. அக்பர் அலி தலைமையுரையாற்றினார். இறுதியில் நூலாசிரியர் Dr. A.P. முஹம்மது அலி IPS ஏற்புரையாற்ற, சாஜிதா புக் சென்டர், எம். முஹம்மது யஹ்யா நன்றியுரை நவின்றார்.
மண்ணடிப் பகுதியிலுள்ள பல்வேறு மஹல்லாக்களைச் சார்ந்த முஸ்லிம்களும் முக்கியப் பிரமுகர்களும் பெண்களும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். துஆவுடன் விழா இனிதே நிறைவுற்றது.
-தகவல்: நூ. அப்துல் ஹாதி பாகவி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக