வியாழன், 3 ஜூன், 2010

“வீணாகும் வரிப்பணம்”

ஜுன் 3ஆம் தேதி தினமணி ஆசிரியர் எழுதியுள்ள “வீணாகும் வரிப்பணம்” எனும் தலையங்கம் சற்றுக் கூர்ந்து நோக்கத்தக்கது. அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் இரண்டு குழுவினரும் இணைந்து செயல்பட்டால் நிச்சயம் ஏழைகள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் குறைந்துவிடுவார்கள் என்பது உறுதி.

அதிகாரிகள் தம் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் உரியவர்களுக்கு அரசாங்க உதவிகள் சென்றடையும். இது சாதாரணமாக எல்லோருக்கும் வந்துவிடாது. இறையச்சமும் பொறுப்புணர்வு உள்ளோரும்தாம் அவ்வாறு செயல்பட முடியும். அந்நாள் எப்போது வருகிறதோ அந்நாள்தான் ஏழைகளின் பொன்னாள்.
நூ. அப்துல் ஹாதி பாகவி
ஆலங்குடி.
சென்னை 81