வியாழன், 15 ஏப்ரல், 2010

முறைப்படுத்துதல் முறையா?

தினமணி ஆசிரியரின் முறைப்படுத்துதல் முறையா? எனும் தலையங்கத்தின் வெளிப்படையான கருத்துகள் ஆட்சியாளர்களை நேரடியாக நிற்க வைத்துக் கேள்வி கேட்பதாகவே தோன்றுகிறது. முறையற்றதை முறைப்படுத்துவதே ஒரு முட்டாள்தனமாகும். அது சாத்தியமானால் முறையானதெல்லாம் இனி முறையற்றதாகவே ஆக்கப்பட்டுவிடும். முறையான அணுகுமுறை முட்டாள்தனத்தைப்போல் பார்க்கப்படும். எனவே முறையற்றோர்  செய்துவரும் நடவடிக்கைகளை முனைப்புடன் களைந்து முறையாகச் செயல்படுவோரை ஊக்குவிப்பதே முறையான அரசின் முழுமுதற் கடமையாகும். இதை அரசு முதலில் உணர்ந்து செயல்பட வேண்டும். அப்துல் ஹாதி பாகவி (ஆலங்குடி) சென்னை. 81