சுய விவரக் குறிப்பு

என் பெயர் அப்துல் ஹாதி. தந்தை பெயர் நூர் முஹம்மது. சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி. நான் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு வேலூரில் அமைந்துள்ள அல்பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் காலடி வைத்தேன். அப்போது எனக்கு 16 வயது. 

அங்கே ஓதிக்கொண்டே பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதினேன். பின்னர் அண்ணாமலை பல்கலைக் கழகத் தொலைநிலைக் கல்வி மூலம் பி.ஏ. வரலாறு பயின்றேன். அத்துடனே சென்னைப் பல்கலைக் கழகத்தின் மூலம் அஃப்ஸலுல் உலமா தேர்வை முடித்துவிட்டேன். ஆக பாக்கியாத்தை விட்டு வெளியே வந்தபோது ஒரு பி.ஏ. பட்டதாரியாகவும் ஓர் ஆலிமாகவும் வெளியே வந்தேன். 

அதன் பின்னர் கல்வியின் ஆர்வத்தால் உ.பி.யில் உள்ள தேவ்பந்த் எனும் ஊரில் அமைந்துள்ள தாருல் உலூமில் ஓராண்டு கல்வி பயின்றேன். அதன் பின்னர் சென்னை வந்த நான் இங்கேயே ஒரு பள்ளிவாசலில் பணிசெய்துகொண்டே சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை அரபி பயின்றேன். அதை முடித்த பின் இளம் முனைவருக்காக விண்ணப்பம் செய்தேன். அதை முடித்த பின் அல்லாஹ்வின் அருளால் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு. 2015ஆம் ஆண்டு முனைவர் (பிஎச்.டி.) பட்டம் பெற்றேன். 

உலகிலுள்ள தமிழர்கள்  அனைவரும் பயன்பெறும் வகையில் என் பணி அமையவே நான் இந்த வலைப்பூவைத் தொடங்கி உள்ளேன். தமிழர்கள் பலர் பயன்பெறுகிறார்கள் என்று நம்புகிறேன். அல்ஹம்து லில்லாஹ்.


சுய விவரக் குறிப்பு

பெயர்          :     டாக்டர் மௌலவி, காரீ, நூ. அப்துல் ஹாதி பாகவி

பிறந்த ஊர் :     ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்)

வயது           :     31 01 1977         

படிப்பு               

                மௌலவி  :     அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் (1993-2000)

                காரீ       :     அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் (2000)

                ஃபாஸில்   :     தாருல் உலூம் தேவ்பந்த் (2001)

பி. ஏ.      :     அண்ணாமலை பல்கலைக் கழகம் (1997-1999)

அப்ஸலுல்

உலமா    :     சென்னைப் பல்கலைக் கழகம் (1998-2000)

                எம். ஏ.    :     சென்னைப் பல்கலைக் கழகம் (2002-2004)

                எம்.ஃபில்.  :     சென்னைப் பல்கலைக் கழகம் (2005)

                பிஎச்.டி.    :     சென்னைப் பல்கலைக் கழகம் (2009-2015)

 

பணி: இமாம், மதீனா மஸ்ஜித், பட்டினப்பாக்கம், சென்னை,

பொறுப்பு ஆசிரியர்: இனிய திசைகள் மாத இதழ்,

 

எழுதிய நூல்கள்:

 

1. அழைப்புப் பணி அழைப்பாளர் - தாருல் ஹுதா, மண்ணடி.

            (மூலநூல்: சவூதி உலமா குழு (ஆங்கிலம்)

 

2. இஸ்லாமிய இல்லறம்

(மூலநூல்: Muslim Family (English)  -முஹம்மது முஸ்தஃபா அல்ஜிபாலி

 

3. அல்லுவுலுவு வல்மர்ஜான்- முத்தும் பவளமும்

(மூலநூல்: முஹம்மது ஃபுஆத் அப்துல் பாக்கீ (ரஹ்)

 

4. நபிவழி  மருத்துவம்,

     (மூலநூல்: திப்புந் நபவீ - இப்னு கய்யும் அல்ஜவ்ஸீ (ரஹ்)

 

5. வாழ்க்கையை அனுபவி

(மூலநூல்: இஸ்தம்த்திஉ பி ஹயாத்திக - டாக்டர் முஹம்மது அப்துர் ரஹ்மான் அல்அரீஃபீ

 

இவை அனைத்தும் சாஜிதா புக் சென்டர். மண்ணடி, சென்னை.

 

6. நபிமார்கள் வரலாறு (3 பாகங்கள்)

(மூலநூல்: அல் பிதாயா வந்நிஹாயா - கஸஸுல் அன்பியா - இமாம் இப்னு கஸீர் (ரஹ்)

 

ஆயிஷா பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை.

 

7. சுனனுன் நஸாயீ  (4 பாகங்கள்)

     (மூலநூல்: அஹ்மத் பின் ஷுஐப் (ரஹ்)

 

8. இப்னுமாஜா (3 பாகங்கள்)

     (மூலநூல்: அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் யஸீத் (ரஹ்)

 

இவ்விரண்டும் ரஹ்மத் பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை.

 

9. மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா (ஹதீஸ் நூல்)

(அப்துல்லாஹ் பதிப்பகம், மயிலாடுதுறை).

 

------------------------------------

சொந்த ஆக்கங்கள்

10. திருக்குர்ஆனை எளிதில் ஓதிட... (சிறுவர்களுக்கானது)

11. மாநபியும் மருத்துவமும்

12. இறைநம்பிக்கை கொண்டோரே (தொகுப்பு நூல்)

13. பூபாள இராகங்கள்  (கவிதை)

14. சொர்க்கம் செல்ல ஆசையா? (குறுநூல்)

15. மார்க்கக் கல்வி மகத்தானது  (குறுநூல்)

 

======================

இன் ஷாஅல்லாஹ் விரைவில் அச்சுக்குச் செல்லவுள்ளவை

1.       புலூஃகுஸ் ஸஆதா  (ஏகத்துவ ஹதீஸ்கள்)

2.       ரவ்ளாத்துல் ஜன்னா - 5 பாகங்கள் (ஆங்கில வழி- சிறுவர்களுக்கானது)


------------

நூலாக்கம் செய்தவை:  பற்பல

மெய்திருத்தியவை:        பற்பல

 

௦௦௦௦௦௦௦௦