வெள்ளி, 28 ஏப்ரல், 2023

மார்க்கக் கல்வியை மதிப்போம் (Let's respect the Islamic religious knowle...

மார்க்கக் கல்வியை மதிப்போம் (Let's respect the Islamic religious knowledge) -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. இமாம் மதீனா மஸ்ஜித் பட்டினப்பாக்கம் சென்னை-28 அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்கள் ஒட்டுமொத்தமாகப் போருக்கு) புறப்படுவது உசிதமன்று, அவர்களுள் ஒவ்வொரு பிரிவினரிலிருந்தும் ஒரு குழுவினர் (மட்டும்) புறப்பட்டால் போதாதா? அப்போதுதான் (நபியுடன்) இருப்பவர்கள் மார்க்கத்தைக் கற்கவும் (புறப்பட்டுச் சென்ற) தம் சமுதாயத்தார் தம்மிடம் திரும்பிவரும்போது அவர்களுக்கு எச்சரிக்கையூட்டவும் முடியும். (இதன் மூலம்) அவர்கள் (தம்மைத்) தற்காத்துக் கொள்ளலாம். (9: 122) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு தந்தை தன் பிள்ளைக்குக் கொடுக்கும் வெகுமதிகளுள் நல்லொழுக்கத்தைவிடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை. (நூல்: திர்மிதீ) 28/ 04 / 2023 07/ 10 / 1444

சனி, 22 ஏப்ரல், 2023

மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வோம் (Let's share the happiness)

மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வோம் (Let's share the happiness) மக்கள் என்னிடம் நல்லபடியாக நடந்து கொண்டால் நானும் அவர்களிடம் நல்லபடியாக நடந்து கொள்வேன். மக்கள் என்னிடம் தீமையாக நடந்துகொண்டால் நானும் அவர்களிடம் தீய முறையில் நடந்துகொள்வேன் என்று கூறும் சுயநலவாதிகளாக இருக்காதீர்கள். மாறாக மக்கள் என்னிடம் நல்லபடியாக நடந்து கொண்டாலும் நான் அவர்களிடம் நல்லபடியாக நடந்து கொள்வேன். மக்கள் என்னிடம் தீமையாக நடந்து கொண்டாலும் நீங்கள் அவர்களுக்கு அநியாயம் செய்யாதீர்கள். (பொதுநலவாதிகளாக இருங்கள்.) (திர்மிதீ) -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. இமாம் மதீனா மஸ்ஜித் பட்டினப்பாக்கம் சென்னை-28 22/ 04 / 2023 01/ 10 / 1444

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

ரமளானுக்குப் பின் என்ன?

ரமளானுக்குப் பின் என்ன? What is after the Ramazhan? ஆயிஷா (ரளி) அவர்கள் கூறியதாவது: "நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே'' என்று விடையளித்தார்கள். மேலும், "நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொட முயலுங்கள்'' என்றும் கூறினார்கள். (புகாரீ: 6465) -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. இமாம் மதீனா மஸ்ஜித் பட்டினப்பாக்கம் சென்னை-28 21 / 04 / 2023 29/ 09/ 1444

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

ரமளான் கடைசிப் பத்து இரவுகள் (The last ten nights of Ramazhan)

ரமளான் கடைசிப் பத்து இரவுகள் (The last ten nights of Ramazhan) முபாரக் என்ற வார்த்தை திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது இந்த அத்தியாயம் இறங்கிய வரலாறு மனிதர்களின் வயது குறைந்துகொண்டே வருகிறது ஆதம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களுக்கு 1000 வயது நூஹ் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களுக்கு 950 வயது -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி இமாம் மதீனா மஸ்ஜித் பட்டினப்பாக்கம் சென்னை-28 14 04 2023 22 09 1444

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

ஸகாத் - ஒரு பார்வை Giving Zakaath - At a glance

ஸகாத் - ஒரு பார்வை Giving Zakaath - At a glance உரை : Dr. மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி இமாம் மதீனா மஸ்ஜித் பட்டினப்பாக்கம் சென்னை-28 உதாரணத்திற்கு ஒருவரிடம் 15 பவுன் இருந்தால் கீழ்க்கண்ட முறைப்படி கொடுக்க வேண்டும். ஒரு கிராம் ரூ. 5565 (x8) 1 பவுன் - ரூ. 44,520 15 பவுன் - 15 X ரூ. 44,520 = ரூ. 6,67,800 கொடுக்க வேண்டிய தொகை = ரூ. 6,67,800 % 2.5 = ரூ. 16,695 ============= வங்கித் தொகை ரூ. 1,00,000 கொடுக்க வேண்டிய தொகை = ரூ. 1,00,000 ÷ 40 = ரூ. 2,500 வங்கித் தொகை ரூ. 10,00,000 கொடுக்க வேண்டிய தொகை = ரூ. 10,00,000 ÷ 40 = ரூ. 25,000 வங்கித் தொகை ரூ. 1,00,000,00 (கோடி) கொடுக்க வேண்டிய தொகை = ரூ. 1,00,000,00 ÷ 40 = ரூ. 2,50,000 -=============== 07/ 04 / 2023 15/ 09 / 1444