மஆலிமுஸ் ஸுன்னத்திந் நபவிய்யா 2ஆம் பாகம் நூல் வெளியீட்டு விழா 17.07.2026 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பின் மௌலவி K.M. இல்யாஸ் ரியாஜி அவர்களின் தலைமையில் சென்னை பட்டினப்பாக்கம் மதீனா மஸ்ஜிதில் நடைபெற்றது. மஸ்ஜிதின் தலைவர் அல்ஹாஜ் M. முஹம்மது இர்பான் சேட், மஸ்ஜிதின் பொருளாளர் A. அய்யூப் சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மௌலவி ஹாஃபிழ் S.M. முஹம்மது இஸ்மாயீல் மன்பஈ கிராஅத் ஓதி நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
மஸ்ஜிதின் செயலாளர் A.K. ஜரூக் அலி வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து டாக்டர் A.P. முஹம்மது அலி IPS (Rtrd), மௌலவி B.M. கலீலுர் ரஹ்மான் மன்பஈ, மௌலவி ஜுனைதுல் பக்தாதி ஹஸனி, மௌலவி ஐ. உமர் சித்தீக் பாகவி, மௌலவி ஹாஃபிழ் S. அபுல் ஹஸன் ஷாதலி பாகவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை துணைப் பொதுச் செயலாளர் மௌலவி K.M. இல்யாஸ் ரியாஜி நூலை வெளியிட, அல்ஹாஜ் M.M. அப்துல் கபூர் முதல் பிரதியையும், ஜாமிஆ அல்-பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரிப் பேராசிரியர் மௌலவி ஹாஃபிழ் S.M. ரஹ்மத்துல்லாஹ் பாகவி வெளியிட, அல்ஹாஜ் M. அப்துல் அஜீஸ் இரண்டாம் பிரதியையும், இனிய திசைகள் மாத இதழ் ஆசிரியர் பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகமதலி வெளியிட, A. சித்திக் கனி மூன்றாம் பிரதியையும், மஸ்ஜிதின் தலைவர் அல்ஹாஜ் M. முஹம்மது இர்பான் சேட் வெளியிட, M. இம்ரான் கான் நான்காம் பிரதியையும் பெற்றுக்கொண்டனர்.
பிறகு பேராசிரியர் மௌலவி ஹாஃபிழ் S.M. ரஹ்மத்துல்லாஹ் பாகவி நூலாய்வுரை நிகழ்த்த, பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகமதலி சிறப்புரை நிகழ்த்தினார். இறுதியில் மௌலவி K.M. இல்யாஸ் ரியாஸி தலைமையுரை நிகழ்த்தினார். இந்த மஸ்ஜிதின் இமாமும் இந்நூல் மொழிபெயர்ப்பாளருமான மௌலவி டாக்டர் நூ. அப்துல் ஹாதி பாகவி ஏற்புரையாற்றினார். மஸ்ஜிதின் துணைச் செயலாளர் M. முஹம்மது ஸஹீர் நன்றியுரை நவின்றார். துஆவுடன் விழா இனிதே நிறைவுற்றது.
– தகவல்: நூ. அப்துல் ஹாதி பாகவி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக