செவ்வாய், 18 அக்டோபர், 2022

முனைவர் பட்டம் பெற்ற ஆலிம்களுக்குப் பாராட்டு விழா/ Appreciation ceremony...




 

 

 முனைவர் பட்டம் பெற்ற தமிழக ஆலிம்கள்

 

  1. முனைவர் மௌலவி ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் அஸ்ஹரீ. சென்னை மாவட்ட காஜி 

தமிழ்நாடு தலைமை காஜி

செல்பேசி:

 

  1. முனைவர் மௌலவி முஹம்மது சுலைமான் உமரி.

சென்னை ஆழ்வார்பேட்டை பிரிஸ்டன் கல்லூரியின் இஸ்லாமிய இயல் துறையில் பேராசிரியர். செல்பேசி: 90030 32009 

 

  1. முனைவர் மௌலவி பி.எஸ். சையது மஸ்வூத் ஜமாலி. பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசண்ட் பல்கலைக் கழகத்தின் இஸ்லாமிய இயல் துறையின் தலைவர், வண்டலூர், சென்னை

செல்பேசி எண்: 94442 22875

 

  1. முனைவர் மௌலவி அ. ஜாகிர் ஹுஸைன் பாகவி 

சென்னைப் பல்கலைக் கழகத்தின் அரபுத் துறைத் தலைவர்

செல்பேசி எண்: 94444 27086

 

  1. முனைவர் மௌலவி டி.எம். அப்துல் காதிர் அன்வரி ஜமாலி

ஓய்வுபெற்ற பேராசிரியர்

செல்பேசி எண்: 98407 07083

 

  1. முனைவர் மௌலவி பி.ஏ.முஹம்மது யூசுஃப் ரஹ்மானி, ஃபாஜில் ஜமாலி. பேராசிரியர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசண்ட் பல்கலைக் கழகம் வண்டலூர் சென்னை

செல்பேசி: 72994 79842

 

  1. முனைவர் மௌலவி எம். ஹபீபுல்லாஹ் ஜமாலி.

இமாம், கல்மண்டபம் ஷாஃபிய்யா மஸ்ஜித் இராயபுரம், சென்னை

உதவிப் பேராசிரியர் அரபுத்துறை, புதுக்கல்லூரி சென்னை

செல்பேசி எண்: 97898 81988

 

  1. முனைவர் மௌலவி எம். முஜீபுர் ரஹ்மான் உமரி (தொண்டி)

செல்பேசி எண்: 88705 18708, 94869 53470

 

  1. முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் ஜபருல்லாஹ் மிஸ்பாஹி, ஃபாஸில் உமரி, நத்வி.

உதவிப் பேராசிரியர் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி.

செல்பேசி: 97902 15509

 

  1. முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் ஷம்சுத்தீன் ஜமாலி.

உதவிப் பேராசிரியர் அரபுத்துறை, புதுக்கல்லூரி சென்னை.

செல்பேசி எண்: 98842 13220

 

  1. முனைவர் மௌலவி  அல்ஹாஃபிழ் அன்வர் பாஷா உலவி

சென்னை பெரம்பூர் ரஹ்மானிய்யா மஸ்ஜித் இமாம்

செயலாளர் தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபை

செல்பேசி எண்: 73588 88768

 

  1. முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் எஸ். அப்துஸ் ஸமத் நத்வி.

உதவிப் பேராசிரியர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசண்ட் பல்கலைக் கழகம் வண்டலூர் சென்னை

செல்பேசி எண்: 98406 99131

 

  1. முனைவர் மௌலவி நூ.  அப்துல் ஹாதி பாகவி, ஃபாஸில் தேவ்பந்தி. இமாம் மதீனா பள்ளிவாசல் பட்டினப்பாக்கம் சென்னை

இனிய திசைகள் மாதஇதழ் துணையாசிரியர்.

செல்பேசி எண்: 94443 54429

 

  1. முனைவர் மௌலவி சையது ஃபஸ்லுல்லாஹ் பக்தியாரி உமரி நத்வி.  உதவிப் பேராசிரியர் அரபுத்துறை, புதுக்கல்லூரி சென்னை

செல்பேசி: 98940 83097

 

  1. முனைவர் மௌலவி ஏ. அப்துல் ரஷீத் ஹஸனி

உதவிப்பேராசிரியர், ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி.

செல்பேசி: 97866 03663

 

  1. முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் எஸ். முஹிப்புல்லாஹ் பாகவி. சென்னை-அண்ணா நகர் சாந்தி காலனி, மஸ்ஜித் நூர் பள்ளிவாசல் இமாம் 

அரபு ஆசிரியர் சதக் மெட்ரிக்குலேஷன் பள்ளி அரும்பாக்கம், சென்னை. செல்பேசி எண்: 98847 79094

 

  1. முனைவர் மௌலவி முஹம்மது ரஃபீக் ஹஸனி (ஸ்ரீவில்லிபுத்தூர்)

உதவிப்பேராசிரியர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி. செல்பேசி எண்: 99525 99678

.

 

  1. முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் சயீதுத்தீன் ஜமாலி.

உதவிப் பேராசிரியர் புதுக்கல்லூரி சென்னை

செல்பேசி:

 

  1. முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் ஸஃபியுல்லாஹ் அன்வாரி.

அரபு ஆசிரியர், சென்னை-செங்குன்றம், ஆயிஷா மகளிர் அரபுக்கல்லூரி

செல்பேசி: 99403 78783

 

  1. முனைவர் மௌலவி அப்துர் ரஹீம் ஹஸனி.

பேராசிரியர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அரபிக் அன்ட் கல்ச்சர்  ஹைதராபாத் செல்பேசி: 99520 43773

 

  1. முனைவர் மௌலவி அபூசுலைம் முஹம்மது அஸ்லம் ஹஸனி காஸிமி.

உதவிப் பேராசிரியர் இன்டர்நேஷனல் இஸ்லாமிக் யூனிவர்சிட்டி, மலேசியா.  செல்பேசி: +60 16 2244923

 

  1. முனைவர் மௌலவி  கா. சுல்தான் ஸலாஹுத்தீன் மழாஹிரி காஸிமி.

பேராசிரியர் அல்மத்ரசத்துல் ஃபாஸியா ஜாவியா அரபுக் கல்லூரி காயல்பட்டணம்.

செல்பேசி: 94864 91035 

 

  1. முனைவர் மௌலவி எம். கலீல் அஹ்மது முனீரி.

நிறுவனர். இல்மிய்யா அரபுக் கல்லூரி சென்னை-

செல்பேசி: 93603 53637  

 

  1. முனைவர் மௌலவி ஏ. காஜா முயீனுத்தீன் ஜமாலி.

இமாம் ஆயிஷா பள்ளிவாசல் சென்னை-செங்குன்றம்

முதல்வர் ஆயிஷா மெட்ரிகுலேஷன் ஸ்கூல்

செல்பேசி எண்: 80560 72292

 

  1. முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் எம். சதீதுத்தீன் ஃபாஸில் பாகவி.

இமாம் பீர் குராசானி பள்ளிவாசல் அடையாறு சென்னை

முதல்வர் அல்ஹுதா அரபுக்கல்லூரி  

செல்பேசி: 98409 49403

 

  1. முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் கே.எஃப். ஜலீல் அஹ்மது உஸ்மானி

உதவிப்பேராசிரியர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி. செல்பேசி: 97901 22996

 

27.   முனைவர் மௌலவி ஷேக் இப்ராஹீம் ஹஸனி.

அரபிக் சீனியர் எக்ஸிக்யூட்டிவ், ஃபார்மாசெட்டிகல் கம்பெனி, சென்னை    

செல்பேசி: 99860 53553

 

28.   முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் ஃபக்கீர் இஸ்மாயீல் ஹௌஸீ.

உதவிப்பேராசிரியர். பொருளாதாரத் துறை, புதுக்கல்லூரி சென்னை

செல்பேசி எண்: 96000 94408

 

29.   முனைவர் மௌலவி ஏ.எம். நஹ்வி முஹ்யத்தீன் லெப்பை புகாரீ ஃபாஸில் ஸகாஃபீ.

உதவிப் பேராசிரியர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசண்ட் பல்கலைக் கழகம், வண்டலூர் சென்னை.

செல்பேசி எண்: 96770 37960

 

30.   முனைவர் மௌலவி சையது கமாலுல்லாஹ் பக்தியாரி நத்வி.

உதவிப் பேராசிரியர் அரபுத்துறை புதுக்கல்லூரி சென்னை  

செல்பேசி: 89393 01752

 

31.   முனைவர் மௌலவி எம்.ஷேக் முஹம்மது இல்யாஸ் ஜமாலி

உதவிப் பேராசிரியர் அரபுத் துறை வக்ஃப் போர்ட் கல்லூரி, மதுரை

செல்பேசி: 99438 49039

 

32.   முனைவர் மௌலவி ஏ. அப்துல் ஹை ஹஸனி நத்வி.

உதவிப் பேராசிரியர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசண்ட் பல்கலைக் கழகம், வண்டலூர் சென்னை.

செல்பேசி: 99520 36437

 

33.   முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் ஏ.எம். அலி இப்ராஹீம் ஜமாலி.

உதவிப் பேராசிரியர் அரபுத்துறை ஜமால் முகமது கல்லூரி திருச்சி  

செல்பேசி: 98414 92528

 

34.   முனைவர் மௌலவி ஏ. பஷீர் அஹ்மது ஃபாஸில் ஜமாலி.

அரபுத் துறைத் தலைவர் (ஓய்வு) ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் தில்லி

செல்பேசி: 96502 14138

 

35.   முனைவர் மௌலவி அல்ஹாஃபிழ் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி

முதல்வர் கைருல் பரிய்யா மகளிர் அரபுக் கல்லூரி சென்னை

செல்பேசி: 98411 11367

 

36.   முனைவர் மௌலவி ஷாஹுல் ஹமீத் பாகவி (ஓட்டேரி, சென்னை)

மொழிபெயர்ப்பாளர், தலைமை ஆசிரியர் தாஹா பெண்கள் மத்ரஸா, ஓட்டேரி, சென்னை.  செல்பேசி: 99418 21131

 

37. முனைவர் மௌலவி எஸ். முஹம்மது இப்ராஹீம் ஜமாலி

இணைப்பேராசிரியர், ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி.

அலைபேசி எண்: 91506 81288

 

38. முனைவர் மௌலவி எம். காஜா முஹைதீன் ஜமாலி

இணைப்பேராசிரியர், ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி.

அலைபேசி எண்: 9786601422

 

39. முனைவர் மௌலவி அ. முஹம்மது அப்துல் காதர் ஹஸனி

உதவிப்பேராசிரியர், ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி.

அலைபேசி எண்: 9994896519

 

40. முனைவர் மௌலவி எம். ஜாஃபர் சாதிக் ஹஸனி

உதவிப்பேராசிரியர், ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி.

அலைபேசி எண்: 97900 29002

 

41. முனைவர் மௌலவி அ. முஹம்மது ஆரிஃப் ஹஸனி

உதவிப்பேராசிரியர், ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி.

அலைபேசி எண்: 99408 23368

 

42. முனைவர் மௌலவி ஆர். ஷமீம் அன்ஸாரி ஹஸனி

உதவிப்பேராசிரியர், ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி.

அலைபேசி எண்: 97903 32786

 

43. முனைவர் மௌலவி ஜெ. உபைதுல்லாஹ் ஜமாலி

உதவிப்பேராசிரியர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி.

அலைபேசி எண்: 94441 54216

 

44. முனைவர் மௌலவி எஸ்.ஏ. உஸ்மான் அலி ஹஸனி

உதவிப்பேராசிரியர், பி.எஸ்.அப்துர்ரஹ்மான் கிரஸன்ட் பல்கலைக்கழகம், வண்டலூர், சென்னை.

அலைபேசி எண்: 90944 16420, 86374 66982

 

45. முனைவர் மௌலவி எம். அஹ்மதுல்லாஹ் அல்புகாரீ

உதவிப்பேராசிரியர், பி.எஸ்.அப்துர்ரஹ்மான் கிரஸன்ட் பல்கலைக்கழகம், வண்டலூர், சென்னை.

அலைபேசி எண்: 8248122925, 9444143573

 

46. முனைவர் மௌலவி அ.அப்துல் வாஹித் அல்புகாரீ

உதவிப்பேராசிரியர், ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி.

அலைபேசி எண்: 90807 50574

 

47. முனைவர் மௌலவி எம். ஹுஸைன் அஹ்மது அல்புகாரீ

உதவிப்பேராசிரியர், புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி, சென்னை.

அலைபேசி எண்: 87789 62946

 

48. முனைவர் மௌலவி அபுல் ஹஸன் ஃபாஸி

உதவிப்பேராசிரியர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி.

அலைபேசி எண்: 98941 07531

 

49. முனைவர் மௌலவி சய்யித் அஹ்மதுல்லாஹ் சிராஜீ ஸகாஃபீ காமில்

உதவிப்பேராசிரியர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி. அலைபேசி எண்: 81224 70507

 

50. முனைவர் மௌலவி முஹம்மது ரஃபீக் ஹஸனி (கடையநல்லூர்)

உதவிப்பேராசிரியர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி. அலைபேசி எண்: 86108 87165

 

51.   முனைவர் மௌலவி ஒய்.ஏ. ஜஹீர் அப்துல் ஹஃபூர் ஹஸனி  

உதவிப்பேராசிரியர். ஆங்கிலத் துறை, புதுக்கல்லூரி சென்னை

செல்பேசி எண்: 98840 63090

 

 ---------------------------------

 குறிப்பு: ஆலிமாக இருந்து, முனைவர் பட்டம் பெற்றுள்ள வேறு யாரேனும் இருந்தால் இந்த எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்: 9444354429

 -தொகுப்பு: முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

  ===================================================

வெள்ளி, 14 அக்டோபர், 2022

மாநபி ஸல் ஒரு முன்மாதிரி மருத்துவர் (The prophet Mohammed -Sal- as a ...


மாநபி ஸல் ஒரு முன்மாதிரி மருத்துவர் (The prophet Mohammed -Sal- as a role model doctor) அடிக்கடி பசியை உணர்பவர்கள் தம் சட்டைப்பைக்குள் சில பேரீச்சம் பழங்களை வைத்துக்கொண்டால் , அதை அவ்வப்போது சாப்பிட்டுக்கொள்ளலாம். -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி இமாம் மதீனா மஸ்ஜித் பட்டினப் பாக்கம் சென்னை-28 14/ 10 / 2022 17/ 03 / 1444

வெள்ளி, 7 அக்டோபர், 2022

அண்ணலார் ஒரு முன்மாதிரி ஆசிரியர்


அண்ணலார் ஒரு முன்மாதிரி ஆசிரியர் The prophet Mohammed (Sal) a role model tutor -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. இமாம் மதீனா மஸ்ஜித் பட்டினப்பாக்கம் சென்னை-28 07/ 10 / 2022 10/ 03 / 1444

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

அகிலம் முழுவதும் முஹம்மது நபியின் புகழ் (Mohammed's eulogy in all parts ...





அகிலம் முழுவதும் முஹம்மது நபியின் புகழ் (Mohammed's eulogy in all parts of the world) ஒரு குழுவினர் சபை ஒன்றில் அமர்ந்து இறைவனை நினைவு கூராமலும் தங்களின் தூதர் மீது ஸலவாத் கூறாமலும் இருப்பார்களானால் அவர்கள் மன இறுக்கத்திற்கும் நஷ்டத்திற்கும் உள்ளாவார்கள். இறைவன் நாடினால் (அம்மக்களின் முந்தைய பாவங்களின் காரணமாக ) அவர்களை வேதனைக்குள்ளாக்குவான். அவன் நாடினால் (அவனுடைய அருளாலும் தயாள குணத்தாலும்) அவர்களை மன்னிப்பான். (திர்மிதீ: 3292) -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. இமாம் மதீனா மஸ்ஜித் பட்டினப்பாக்கம் சென்னை-28 30/ 09 / 2022 03/ 03 / 1444

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

அயல்நாட்டுப் பயணி

 
 
வெளிநாட்டு மாப்பிள்ளை
எனும்
வெளிப்புறப் பகட்டோடு
கோலாகலமாய்த் திருமணம் முடிந்தது.
 
மணமுடிந்து
இரண்டே மாதங்கள்
இல்லாளோடு
இனிய வாழ்க்கை.
இனிதே கழிந்தன நாள்கள்.
பகலவனைக்  கண்டதும்
பனித்துளிகள்
காய்ந்து விடுவதைப்போல
தேய்ந்து போயின நாள்கள்.
 
ஆசைப்பட்டுக் கேட்ட
ஆரஞ்சு மிட்டாயை
வாங்கிக் கொடுத்துவிட்டுத்
தட்டிப் பறித்துக்கொண்டதைப்போல்
உணர்ந்தேன்
விடுமுறை முடிந்ததை எண்ணி...
கட்டிய கன்னியைத் தனியே
விட்டுவிட்டுப்
புறப்பட்டேன் அயல்நாடு. 
 
 
ஈராண்டுகளுக்கு
ஒரு முறை எனத்
திரும்பினேன் தாயகம்.
விடுமுறை நாள்கள்
பனிக்கட்டியாய்க் கரைந்ததும்
மீண்டும் அயலகம்.
 
இதோ
நாற்பது ஆண்டுகள்
கடந்து முடிந்தன
வாழ்ந்த நாள்களோ
மிகக் குறைவு.
 
அன்றாட வாழ்க்கையில்
அன்பான மனைவியோடு
குழைந்து  உறவாடி
கூடிக் குலாவி தினம்
மெய்யோடு மெய்சேர்த்து
ஒன்றாகத் துயில்கொள்ளும்
தாம்பத்திய இன்பத்தை இழந்தேன்.
 
அவளுக்கு நானூட்ட
எனக்கு அவளூட்ட
அன்றாடம் அனுபவிக்கும்
பேரின்பம் இழந்தேன்.
 
தந்தை எனும் பொறுப்பில்
அரவணைப்பையும்
அறிவுசார் கருத்துகளையும்
என் பிள்ளைகளுக்கு
வழங்கும் வாய்ப்பினை இழந்தேன்.
 
உறவினர்கள் திருமணத்திற்கு
உயிருக்கு உயிரான – என்
உயிரோடு கலந்த  
இல்லாளை அழைத்துச்சென்று
இன்புற்று மகிழும்
நல் வாய்ப்பினை இழந்தேன்.
 
உறவினர்கள் யாரேனும்
உயிர்துறந்து விட்டாலும்
அருகில் இருந்து
ஆறுதல் கூறும்
நல் வாய்ப்பினை இழந்தேன்.
 
உறவினர் பலரின்
சுக-துக்க நிகழ்வுகளில்
கலந்துகொண்டு
 ஒருவருக்கொருவர்
பரிமாறிக்கொள்ளும்
அன்பையும் ஆறுதலையும்
பெற முடியா த
துர்பாக்கியசாலி ஆனேன்.
 
நோயுற்றபோது
அன்போடும் ஆதரவோடும்
ஆறுதல் வார்த்தைகள் பேசித்
தேற்றவும்  
ஆற்றுப்படுத்தவும்
அருகில் துணைவியின்றி
எல்லாச் சுகங்களையும் இழந்தேன்.
 
 
நாள்தோறும்
நாவிற்கினிய
சுவையான உணவின்றிக்
கிடைத்ததைத் தின்று
காலம் கழித்தேன்.
 
 
உள்நாட்டில்
நன்றாகப் படித்து,
அரசுப் பணியில் சேர்ந்து
காலம் முழுவதும்
சுகமாகவும் சுதந்திரமாகவும்
வாழும் வாழ்க்கையை இழந்தேன்.
 
வாழும் காலமெல்லாம்
ஓய்வின்றி உழைத்து
மிகைநேரப் பணி செய்து
மிகுதியாய் உழைத்து
மாதந்தோறும்
பணம் அனுப்பி வைக்கிற
ஏடிஎம்  எந்திரமாய் மாறிப்போனேன்.
 
பல்லாண்டு காலம்
பாலைவன நாட்டில்
தனிமையில் வாழ்ந்து
என் இளமை முழுவதையும்
அயல்நாட்டுப் பணத்திற்கு
விற்றுவிட்டு,
முதுமையின் இறுதியில்
உள்ளூரில் அமைந்துள்ள
மஸ்ஜிதின் திண்ணையில்
ஓர் ஒதுங்குமிடம் தேடி
ஓய்வெடுக்கிறேன்.
 
அன்புடன்
கவிஞர்    
நூ. அப்துல் ஹாதி பாகவி
18 09 2022
20 02 1444
------------------------


சனி, 17 செப்டம்பர், 2022

உள்நாட்டில் கால் பதிப்போம்!

 -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

அண்மையில் வாட்ஸ்அப்பில், தமிழகத்தைச் சார்ந்த அயல்நாட்டுப் பயணி ஒருவரின் குரல்வழிச் செய்தியைக் கேட்க நேர்ந்தது. அதில் அவர் தம் நாற்பதாண்டு கால அயல்நாட்டு வாழ்க்கையால் இல்வாழ்வை இழந்ததையும், பணத்திற்காக வாழ்க்கையைத் தொலைத்துவிட்டோமே என்றும் புலம்புகிறார். நாம் ஏன் உள்நாட்டிலேயே சம்பாதித்திருக்கக்கூடாது? நாம் ஏன் சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட வேண்டும்? இல்வாழ்க்கையை இழந்தாலும் பணத்தோடும் பகட்டோடும் வாழ வேண்டுமென எண்ணுகிற நம் குடும்பப் பெண்களின் மனப்போக்கை எவ்வாறு மாற்றப்போகிறோம் என்றெல்லாம் தம் வருத்தங்களை அதில் பதிவு செய்துள்ளார்.

மூன்று, நான்கு தலைமுறைகளாக நம் சகோதரர்கள் அயல்நாடு சென்று சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டி வருவதை நாம் கண்டுவருகிறோம். ஆண்பிள்ளை வளர்ந்து வருகின்றபோதே அவர்கள்தம்  அன்னையர் அயல்நாட்டுச் சம்பாத்தியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி அவர்களைத் தயார்படுத்தும் நிலை, கடற்கரை ஓரங்களில் வாழ்கின்ற பெரும்பாலான முஸ்லிம் ஊர்களில் காணப்படுகிறது. அயல் நாட்டில் சம்பாதித்தால்தான் கைநிறையச் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் ஊட்டப்படுகிறது. அன்னையரின் அறிவுரை ஆண்களின் மூளையில் அப்படியே இறங்கி அழுத்தமாக அமர்ந்துகொள்கிறது. இது  தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

முற்காலங்களில் வாழ்ந்த நம் முன்னோர்களும் கடல் தாண்டி அயல்நாடுகளுக்குச் சென்று சம்பாதித்து வந்துள்ளனர் என்பது வரலாறு. ஆனால் அவர்கள் சம்பாதித்ததற்கும் தற்போதைய இளைஞர்கள் சென்று சம்பாதிப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. அன்றைய முஸ்லிம்கள் வியாபார நோக்கில் அயல்நாடுகளுக்குச் சென்றார்கள். இங்குள்ள தரமான பொருள்களை அயல்நாடுகளுக்குக் கொண்டு சென்று வியாபாரம் செய்து சம்பாதித்து, சம்பாதித்த பணத்தில் அங்குள்ள பொருள்களை வாங்கிக் கொண்டு ஓரிரு மாதங்களில் தாயகம் திரும்புவார்கள்.  பிறகு சில காலம் கழித்து மீண்டும் செல்வார்கள். இது அவர்களின் வழக்கமாக இருந்தது. இதனால் அவர்களின் இல்வாழ்வு பாதிக்கப்படவில்லை.

ஆனால் தற்கால இளைஞர்கள் திருமணத்திற்குப்பின் அயல்நாடு சென்றால் பதினோரு மாதங்கள் கழித்துத்தான் தாயகம் திரும்ப முடியும். சிலர் ஈராண்டுகள் ஒப்பந்தத்தில் செல்கிறார்கள். அவர்கள் ஈராண்டுகள் கழித்துத்தான் தாயகம் திரும்ப முடியும். அது வரை தம்பதியர் ஒருவரையொருவர் பிரிந்துதான் இருக்க வேண்டும். இது இருவருக்கும் எவ்வளவு  மன அழுத்தத்தையும் ஏக்கத்தையும் உருவாக்குகிறது என்பதைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்.

நம் சகோதரர்கள் பொருளீட்ட அயல்நாடுகளுக்குச் சென்றுவிடுவதால் நம்மவர்கள் இழந்தவை ஏராளம். ஒரு பெண் தன் கணவனுடன் தாம்பத்திய வாழ்க்கையை இழந்துவிடுகிறாள்; ஓர் ஆண் தன் மனைவியோடு கூடிக் குலாவி மெய்யோடு மெய் சேர்ந்து துயில்கொள்ளும் இன்பத்தை இழந்து விடுகின்றான்; பிள்ளைகள் தம் தந்தையின் அரவணைப்பையும் அறிவுசார் கருத்துகளையும் இழந்துவிடுகின்றனர்; உறவினர்கள் உறவை இழந்துவிடுகின்றார்கள்; சுக-துக்க நிகழ்வுகளில் கலந்துகொண்டு, ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் அன்பையும் ஆறுதல் வார்த்தைகளையும் பெற முடியாமல் இழந்துவிடுகின்றான்; நோயுற்றபோது அன்போடும் ஆதரவோடும் ஆறுதல் வார்த்தைகள் பேசித் தேற்றுவதற்கும் பணிவிடைகள் செய்வதற்கும் துணைவியின்றி எல்லாச் சுகங்களையும் இழந்துவிடுகின்றான்; ஒவ்வொரு நாளும் சுவையான உணவின்றிக் கிடைத்ததைத் தின்று காலம் கழிப்பதால் பலவற்றை இழந்துவிடுகின்றான்.

உள்நாட்டில் நன்றாகப் படித்து, ஓர் அரசுப் பணியில் சேர்ந்து காலம் முழுவதும் சுகமாகவும் சுதந்திரமாகவும் வாழும் வாழ்க்கையை இழந்தான்; தேர்தல் வருகின்றபோதெல்லாம் நல்ல ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பின்றி வாக்குரிமையை இழந்தான்; வாழும் காலமெல்லாம் ஓய்வின்றி உழைத்து மிகைநேரப் பணி (ஓவர்டைம் ஒர்க்) செய்து பணம் அனுப்பி வைக்கிற ஏடிஎம்  எந்திரமாக மாறிப்போனதால் தன் வாழ்வில் நிம்மதி இழந்தான்; பல்லாண்டு காலம் பாலைவன நாட்டில் தனிமையில் வாழ்ந்தவன், தன் இளமை முழுவதையும் அயல்நாட்டுப் பணத்திற்கு விற்றுவிட்டு, முதுமையின் கடைநிலையில் உள்ளூரில் அமைந்துள்ள மஸ்ஜிதின் திண்ணையில் ஓர் ஒதுங்குமிடம் தேடி ஓய்வெடுக்கிறான்.

நன்றாகப் படித்து, பட்டங்கள் பெற்று ஓர் உயரிய பதவியில் அயல்நாட்டில் பணி கிடைத்து, தன் துணைவியோடு அங்கு உழைத்து வாழ்கிறான் என்றால் அதை நாம் வரவேற்போம். அதற்கு எந்தத் தடையுமில்லை. மாறாக அரைகுறைப் படிப்போடு அயல்நாட்டு மோகத்தில் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள்மீதே நான் சினம் கொள்கிறேன். ஓர் இளங்கலைப் பட்டமோ முதுகலைப் பட்டமோ இன்றி அயல்நாடு சென்று நீ உன் இளமையை இழக்க வேண்டுமா? நீ நன்றாகப் படித்துப் பட்டம்பெற்று, டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி உள்ளிட்ட ஏதேனும் அரசுத் தேர்வெழுதி உயர் பதவியில் அமர்ந்து காலம் முழுவதும் இல்வாழ்வு எனும் அறம் பேணி வாழ்வதை நீ ஏன் இழக்க வேண்டும்? இன்றைய இளைஞர்கள் பலர் அயல்நாடு சென்றுவிடுவதால் நமக்காக ஒதுக்கப்பட்டுள்ள 3.5 சதவிகிதத்திற்கும் உரிய ஆளின்றி வேறு யார் யாரோ அதையெல்லாம் அடைந்துகொள்கிறார்கள்.

அயல்நாட்டில் அயராது உழைக்கும் நீ உள்நாட்டில் உழைத்திருந்தால் இப்போது நீ ஒரு கடைக்கோ, ஒரு நிறுவனத்திற்கோ முதலாளி ஆகியிருப்பாய்; உனக்குக் கீழ் சிலர் வேலை செய்துகொண்டிருந்திருப்பார்கள். உன் இல்வாழ்வும் தொலைந்துபோயிருக்காது; உன் இளமையும் வீணாகியிருக்காது. இப்போது நீ உன் முதுமையில் புலம்புவதைப்போல் புலம்பிடத் தேவையிருந்திருக்காது. உன் மனைவி சிக்கன வாழ்வைக் கற்றுக்கொண்டிருந்திருப்பாள். உள்நாட்டில் உன் இருப்பு நிலைத்திருக்கும். அந்தோ! யாவும் தொலைந்தனவே!

இளைஞர்களே! அயல்நாட்டுக் கனவை ஓர் ஓரமாக ஒதுக்கிவையுங்கள். "திரை கடலோடியும் திரவியம் தேடு'' எனும் முதுமொழி இருந்தாலும், "உள்நாட்டில் உழை; அதுவே உயர்நிலை'' எனும் புதுமொழியை மனதில் கொண்டு உள்நாட்டில் உழைத்து முன்னேறப் பாடுபடு; சுயதொழில் தொடங்கு அல்லது அரசு வேலையைப் போராடிப் பெறு. உள்நாட்டில் பணியாற்றுவதால் எத்தனையெத்தனை நன்மைகள்! உன் பெற்றோருடனும் பிள்ளைகளுடனும் உறவினர்களோடும்  உவகை பொங்க வாழலாம். அன்பான மனைவியைவிட்டுப் பிரிந்து சென்று, வாட்ஸ்அப்பில் குடும்பம் நடத்த வேண்டிய அவசியமில்லை. உறவுகளோடு சின்னச் சின்னச் சண்டைகள் போட்டு பிணங்கிக் கொண்டாலும் காலப் போக்கில் ஒருவருக்கொருவர் இணங்கிக்கொள்ளலாம்.

நன்றாகப் படித்து, உயர் பதவியொன்று அயல்நாட்டில் அமைந்து, துணைவியோடு சேர்ந்து செல்லும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்றால் அப்போது அயல்நாட்டில் பணியாற்றுவதில் குற்றமில்லை.  அதுவன்றித் தனியாகச் சென்று அடிமட்டப் பணிசெய்து பொருளீட்ட எண்ணாதே! அதனால் உன் இல்வாழ்வையும் இழந்து, உன்னை நம்பி வந்தவளின் தாம்பத்திய வாழ்வையும் பறித்துக்கொண்டு எதைச் சாதிக்கப்போகிறாய்? ஒரு வாழ்க்கையைத் தொலைத்தபின் உனக்கு மட்டும் இன்னொரு வாழ்க்கையா கிடைக்கப்போகிறது?

ஒருக்கால் உள்நாட்டில் உன்னுடைய சம்பாத்தியம் மட்டும் போதவில்லை என்று எண்ணினால் உன் மனைவியையும் நல்லதொரு பணிக்கு அனுப்பலாம். அவளும் சம்பாதிக்கலாம். இருவரும் சம்பாதித்து இனிமையாகக் குடும்ப வாழ்க்கையை நடத்தலாமே? நம் சமுதாயப் பெண்கள் பலர் இளநிலையோ முதுகலையோ படித்துவிட்டுச் சும்மாதானே இருக்கிறார்கள்? அவர்களுடைய பெற்றோர் திருமணப் பத்திரிகையில் போடுவதற்காக மட்டுமா அவர்களைப் படிக்க வைத்தார்கள்? பெண்களுக்கான எத்தனையோ பணி வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்கள் மட்டுமே பணியாற்ற வேண்டிய எத்தனையோ துறைகள் இருக்கின்றன. அது மட்டுமின்றிப் பெண்களுக்கான அரசு ஒதுக்கீடு (கோட்டா) வேறு உண்டு. பெண்களுக்குத் தோதுவான ஆசிரியப் பணி, மருத்துவப் பணி, மருந்தாளர் பணி, செவிலியர் பணி உள்ளிட்டவை உள்ளன. இத்தகைய ஏதாவது பணியை மேற்கொண்டு உள்நாட்டிலேயே சம்பாதிப்பதற்கான வழிகள் ஏராளம் இருக்கும்போது ஏன் அயல்நாடு சென்று, இரண்டும் கெட்டான் வாழ்க்கை வாழ வேண்டும்?

அயல்நாட்டில் பல்லாண்டுகள் பணி செய்த நண்பர் ஒருவர், இனியாவது நாம் உள்நாட்டிலேயே ஏதாவது பணி செய்துகொண்டு, தம் குடும்பத்தாரோடு சேர்ந்து வாழலாம் என்று முடிவெடுத்து, அயல்நாட்டுப் பணியை முடித்துக்கொள்ளப்போவதாகத் தம் மனைவியிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவர்தம் மனைவி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. மிக நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே அவர் உறுதியாக முடிவெடுத்து, அயல்நாட்டுப் பணியை முடித்துக்கொண்டு தற்போது உள்நாட்டில் பணியாற்றிவருகிறார். மாதந்தோறும் கைநிறையப் பணத்தைப் பார்த்த நம் பெண்கள் அப்பணத்திற்கே அடிமையாகிவிட்டதையே இந்நிகழ்வு காட்டுகிறது. தன் கணவனோடு ஒன்றாக வாழ்வதைவிடப் பணத்தோடு வாழ்வதே சிலருக்கு இனிக்கிறது. 

இளைஞர்களே, சிந்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் உள்ளது. எதிர்கால வாழ்க்கையைத் திட்டமிட்டு அமைத்துக்கொள்வது உங்கள் பொறுப்பு. இனியாவது மாற்றி யோசியுங்கள். உள்நாட்டில் கால்பதிக்க முயலுங்கள்.

=====================






வெள்ளி, 16 செப்டம்பர், 2022

விலைவாசி உயர்வுக்கு யார் காரணம் (Who is the root cause to rise in price?)


விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்
(Who is the root cause to rise in price?) அனஸ் (ரளி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (ஒருமுறை) விலைவாசி உயர்ந்தது. அப்போது மக்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு விலை நிர்ணயம் செய்யுங்கள்!" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்தான் விலை நிர்ணயம் செய்பவன்: வாழ்வாதாரத்தைக் குறைப்பவன், தாராளமாக வழங்குபவன் ஆவான். உயிரிலோ பொருளிலோ (நான்) அநீதியிழைத்ததாக உங்களில் யாரும் என்னிடம் முறையிடாத நிலையில் என் இறைவனைச் சந்திக்கவே நான் விரும்புகிறேன்" என்றார்கள். -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி இமாம் மதீனா மஸ்ஜித் பட்டினப்பாக்கம் சென்னை-28 16/ 09 / 2022 18/ 02 / 1444