செவ்வாய், 17 நவம்பர், 2009
ஆண்கள் சுய உதவிக் குழு
வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறவர்கள் ஒன்றிணைந்து தமக்குத் தெரிந்த
ஏதேனும் ஒரு தொழிலைத் தொடங்கினால்
அதுவே அவர்களின் எதிர்காலத்தை
நிர்ணயிக்கின்ற அடிப்படைத் தூணாக அமையும்.
லேபிள்கள்:
சுய உதவிக் குழு,
வேலை தேடி
திங்கள், 16 நவம்பர், 2009
வெள்ளி, 13 நவம்பர், 2009
இரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்
சில தாவரங்கள் விஷமுள்ள விதைகளைக் கொண்டிருக்கின்றன. இது, தாவரங்களை உணவாக உட்கொள்ளும் விலங்குகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, தாவரங்கள் கொண்டிருக்கும் பாதுகாப்பு முறையாகும். இருப்பினும் அமெரிக்காவில் வாழும் ஒருவகைக் கிளியினம் இதுபோன்ற விஷமுள்ள விதைகளை உணவாக உட்கொள்கிறது. இது மிகவும் வியப்புக்குரிய செயலாகும். ஏனெனில், தாவரங்களை உணவாக உட்கொள்ளும் மற்ற விலங்கினங்கள் இந்த செடியின் பக்கம் தலைகாட்டவே பயப்படும்போது, இந்தப் பறவையினம் மட்டும் தொடர்ந்து விஷமுள்ள இந்த விதைகளை உணவாக உட்கொண்டும் எந்த விதப் பாதிப்புக்கும் உள்ளாவதில்லை.
ஆங்கிலத்தில் 'மகாவ்' (MACAW) என அழைக்கப்படுகின்ற இந்தக் கிளியினம், விஷ விதைகளை உணவாக உட்கொண்டாலும் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாவதில்லையே, எப்படி? என்கிற கேள்வி, விஞ்ஞானிகளின் கவனத்தையும் ஈர்த்தது. இந்தக் கிளியினத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது அவற்றிடம் உள்ள முற்றிலும் வித்தியாசமான நடத்தையை அறிய முடிந்தது.
அவை உணவாக உட்கொள்ளக்கூடிய, ஆனால் விஷத்தன்மையுள்ள இந்த விதைகளை உட்கொண்டதும், இந்தக் கிளிகள் பாறை போன்ற ஓர் இடத்திற்குப் பறந்து செல்கின்றன. அங்குள்ள பாறைகளைக் கொஞ்சம், கொஞ்சமாக அரித்து, களிமண் தன்மை கொண்ட பாறைகளை விழுங்குகின்றன. இவ்வாறு களிமண் தன்மை கொண்ட பாறைகளைக் கிளிகள் விழுங்கும் இச்செயல், எந்தவித நோக்கமும் இன்றி செய்யக்கூடிய செயல் அல்ல. உண்மையிலேயே, அவை விழுங்கக் கூடிய களிமண் தன்மை கொண்ட பாறைகள், அவை உணவாக உட்கொண்ட விதையில் உள்ள விஷத்தன்மையை முறித்து விடுகின்றன. எனவேதான், இந்தப் பறவையினம் விஷத்தன்மை உள்ள விதைகளை உணவாக உட்கொண்டாலும், எந்தவிதப் பாதிப்புக்கும் உள்ளாவதில்லை.
இந்தப் பறவையினம், விஷத்தன்மை உள்ள விதையைச் செரிக்க வைக்கக்கூடிய மருத்துவ அறிவை எப்படிப் பெற்றுக் கொண்டது? இந்தப் பறவையினம், தான் உணவாக உட்கொண்ட விதையில் உள்ள விஷத்தன்மையை முறிக்கும் வித்தையை எப்படிக் கற்றுக் கொண்டது? ஒருவேளை இப்படி இருக்கலாமோ? கிளிகள் மருத்துவக் கல்வியைக் கற்று, அதன் மூலம் விஷத்தை முறிக்கக்கூடிய குணம் களிமண் தன்மையுள்ள பாறைகளுக்கு உண்டு என்பதை அறிந்திருக்குமோ? நிச்சயமாக அப்படி இல்லை.
ஒரு தாவர விதையைப் பார்த்தவுடன், அது விஷத்தன்மை உள்ளதா? இல்லையா? என்பதை ஆறறிவு படைத்த மனிதர்களால்கூட தெரிந்து கொள்ள முடியாது. அப்படியே அறிந்து கொண்டாலும், அந்தத் தாவர விதையிலுள்ள விஷத்தன்மையைப் போக்க மருத்துவ அறிவு இல்லாத சாதாரண மனிதர்களால் முடியாது. விஷத்தன்மையைப் போக்க வேண்டுமெனில், அதைப் பற்றிய விபரம் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியுமே தவிர, சாதாரண மனிதர்களால் தாவர விதையிலுள்ள விஷத்தன்மையை நீக்க முடியாது. ஆறறிவு படைத்த மனிதர்களின் நிலையே இவ்வாறு இருக்கும்போது, ஐந்தறிவு படைத்த பறவையினம் மருத்துவம் கற்றுக்கொண்டு, விஷத்தன்மையுள்ள தாவர விதையில் உள்ள விஷத்தை நீக்குவது நடக்காத காரியம். மனிதன் பல வருடங்கள் படித்து, ஆய்வுசெய்து பெறக்கூடிய மருத்துவ அறிவு, கிளிகளுக்கு எதேச்சையாகக் கிடைத்திருக்கும் என்பது ஆறறிவு படைத்த மனிதர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதா? நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. எல்லாம் அறிந்த வல்ல அல்லாஹ்வே கிளிகளுக்கு இந்த அறிவை வழங்கினான். அவனே அனைத்தும் அறிந்தவன். ஏனைய படைப்புகளைப் போன்று, கிளிகளும் வல்ல அல்லாஹ்வின் படைப்பாற்றலை உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றன.
அல்லாஹ் அருள்மறைக் குர்ஆனில் குறிப்பிடுகிறான்:
'அவர்கள் தங்களுக்குள்ளே (இது பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ், வானங்களையும், பூமியையும், அவற்றிற்கு இடையிலுள்ளவற்றையும், உண்மையாகவும் குறிப்பிட்ட தவணைக்காகவுமே தவிர படைக்கவில்லை. எனினும், நிச்சயமாக மனிதர்களுள் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள்.' (30: 08)
******************************
லேபிள்கள்:
வேதியியல். மருத்துவ அறிவு
குர்பானி-`அறுக்குமிடம்`
சென்னை போன்ற பெருநகரங்களில்
பலர் வாடகை வீடுகளிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் தொகுப்பு வீடுகளிலும் வசித்துவருகின்றனர். இவர்களுள் பலர் தனித்தனியாக குர்பானி கொடுக்க வசதியிருந்தும் போதிய இட வசதி இல்லாததால் கூட்டுக் குர்பானி கொடுத்து தம்முடைய தியாகத்தை நிறைவு செய்துவிடுகின்றனர். எனவே இவர்களைப் போன்றவர்களும் தாமே சுயமாக அறுத்துப் பலியிட வசதியாக ஒவ்வொரு பகுதியிலும் `அறுக்குமிடம்` ஒன்றை ஏற்படுத்தினால் அது அனைவருக்கும் வசதியாக இருக்கும். விசாலமான இட வசதி உள்ள பள்ளிவாசல்களில் இத்தகைய வசதியை ஏற்படுத்தலாம். விசாலமான இடம் உள்ளவர்கள் பொது நலனையும் நன்மையையும் நாடி இத்தகைய அறுக்குமிடத்தை ஏற்படுத்தலாம். ஆங்காங்கே உள்ள அரபி மதரசாக்களிலும் இவ்வசதியை ஏற்படுத்தலாம். நிறைய ஆடு , மாடுகள் அறுக்கப்படுவதால் நிறைய ஏழைகள் பயனடைவர்.
லேபிள்கள்:
அறுக்குமிடம்,
குர்பானி
புதன், 4 நவம்பர், 2009
வியாழன், 22 அக்டோபர், 2009
கால்களை ஒடித்தோரை மன்னித்துவிட்ட மதானி
உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண் , மூக்குக்கு மூக்கு , காதுக்குக் காது , பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்கும் பழிவாங்கல் (அனுமதிக்கப்பட்டு) உள்ளது என அ(வர்களது வேதமான தவ்ராத்)தில் அவர்களுக்கு நாம் விதியாக்கினோம். ஆனால் , யார் அவரை(ப் பழிவாங்காமல்) மன்னித்து விட்டுவிடுகிறாரோ அவரு(டைய பாவங்களு)க்கு அது பரிகாரமாகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்காதவர்களே அநீதி இழைத்தவர்கள் ஆவர். (05:45)
இறைநம்பிக்கை கொண்டோரே கொல்லப்பட்டோருக்காகப் பழிவாங்கு(ம்போது நேர்மையோடு நடந்துகொள்)வது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. ஆகவே, (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்குப் பதிலாக ஒரு சுதந்திரமானவனும், ஓர் அடிமைக்குப் பதிலாக அடிமையும், ஒரு பெண்ணுக்குப் பதிலாகப் பெண்ணுமே (பழிவாங்கப்படுவர்). ஆனால், (கொலை செய்த) ஒருவருக்கு (கொலையுண்ட) அவருடைய சகோதர(ரின் உறவின)ரால் மன்னிப்பு ஏதேனும் வழங்கப்பட்டால், (கொலையுண்டவரின் உறவினர்) முறையோடு நடந்துகொள்வதும், அவருக்கு (மன்னிக்கப்பட்டவர்) சரியாக (இழப்பீட்டை)ச் செலுத்துவதும் கடமையாகும். இது உங்கள் ïரைவநிடமிருந்து (கிடைத்து)ள்ள சலுகையும் கருணையும் ஆகும். இதற்குப் பிறகும் ஒருவர் வரம்பு மீறினால் அவருக்கு வதைக்கும் வேதனை உண்டு. (02 ;179)
மேற்கண்ட இறைவசனத்தின் அடிப்படையில் `மன்னிப்பு` என்பதைத் தேர்ந்தெடுத்து, தம் கால்களை ஒடித்தோரை மன்னித்துவிட்ட மதானி அவர்களின் பெருந்தன்மையை நாம் போற்றுவோம்.
இறைநம்பிக்கை கொண்டோரே கொல்லப்பட்டோருக்காகப் பழிவாங்கு(ம்போது நேர்மையோடு நடந்துகொள்)வது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. ஆகவே, (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்குப் பதிலாக ஒரு சுதந்திரமானவனும், ஓர் அடிமைக்குப் பதிலாக அடிமையும், ஒரு பெண்ணுக்குப் பதிலாகப் பெண்ணுமே (பழிவாங்கப்படுவர்). ஆனால், (கொலை செய்த) ஒருவருக்கு (கொலையுண்ட) அவருடைய சகோதர(ரின் உறவின)ரால் மன்னிப்பு ஏதேனும் வழங்கப்பட்டால், (கொலையுண்டவரின் உறவினர்) முறையோடு நடந்துகொள்வதும், அவருக்கு (மன்னிக்கப்பட்டவர்) சரியாக (இழப்பீட்டை)ச் செலுத்துவதும் கடமையாகும். இது உங்கள் ïரைவநிடமிருந்து (கிடைத்து)ள்ள சலுகையும் கருணையும் ஆகும். இதற்குப் பிறகும் ஒருவர் வரம்பு மீறினால் அவருக்கு வதைக்கும் வேதனை உண்டு. (02 ;179)
மேற்கண்ட இறைவசனத்தின் அடிப்படையில் `மன்னிப்பு` என்பதைத் தேர்ந்தெடுத்து, தம் கால்களை ஒடித்தோரை மன்னித்துவிட்ட மதானி அவர்களின் பெருந்தன்மையை நாம் போற்றுவோம்.
லேபிள்கள்:
`மன்னிப்பு`,
மதானி
செவ்வாய், 20 அக்டோபர், 2009
அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுவோம்

நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?[2:107 ]
* நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்![7:194 ]
* அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள்.[16:20 ]
* மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது. இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமானவர்களே.[22:73 ]
* அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு அருளை நாடினால் (அதை உங்களுக்குத் தடை செய்பவர் யார்?) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.[33:17 ]
* நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;. யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.[4:48 ]
அறிவுடைய மக்களுக்கு அல்லாஹ்வின் வார்த்தைகளே போதுமானது.
படம் நன்றி;தினத்தந்தி
லேபிள்கள்:
உதவி தேடுவோம்
வியாழன், 8 அக்டோபர், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







