உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண் , மூக்குக்கு மூக்கு , காதுக்குக் காது , பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்கும் பழிவாங்கல் (அனுமதிக்கப்பட்டு) உள்ளது என அ(வர்களது வேதமான தவ்ராத்)தில் அவர்களுக்கு நாம் விதியாக்கினோம். ஆனால் , யார் அவரை(ப் பழிவாங்காமல்) மன்னித்து விட்டுவிடுகிறாரோ அவரு(டைய பாவங்களு)க்கு அது பரிகாரமாகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்காதவர்களே அநீதி இழைத்தவர்கள் ஆவர். (05:45)
இறைநம்பிக்கை கொண்டோரே கொல்லப்பட்டோருக்காகப் பழிவாங்கு(ம்போது நேர்மையோடு நடந்துகொள்)வது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. ஆகவே, (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்குப் பதிலாக ஒரு சுதந்திரமானவனும், ஓர் அடிமைக்குப் பதிலாக அடிமையும், ஒரு பெண்ணுக்குப் பதிலாகப் பெண்ணுமே (பழிவாங்கப்படுவர்). ஆனால், (கொலை செய்த) ஒருவருக்கு (கொலையுண்ட) அவருடைய சகோதர(ரின் உறவின)ரால் மன்னிப்பு ஏதேனும் வழங்கப்பட்டால், (கொலையுண்டவரின் உறவினர்) முறையோடு நடந்துகொள்வதும், அவருக்கு (மன்னிக்கப்பட்டவர்) சரியாக (இழப்பீட்டை)ச் செலுத்துவதும் கடமையாகும். இது உங்கள் ïரைவநிடமிருந்து (கிடைத்து)ள்ள சலுகையும் கருணையும் ஆகும். இதற்குப் பிறகும் ஒருவர் வரம்பு மீறினால் அவருக்கு வதைக்கும் வேதனை உண்டு. (02 ;179)
மேற்கண்ட இறைவசனத்தின் அடிப்படையில் `மன்னிப்பு` என்பதைத் தேர்ந்தெடுத்து, தம் கால்களை ஒடித்தோரை மன்னித்துவிட்ட மதானி அவர்களின் பெருந்தன்மையை நாம் போற்றுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக