வெள்ளி, 13 நவம்பர், 2009
குர்பானி-`அறுக்குமிடம்`
சென்னை போன்ற பெருநகரங்களில்
பலர் வாடகை வீடுகளிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் தொகுப்பு வீடுகளிலும் வசித்துவருகின்றனர். இவர்களுள் பலர் தனித்தனியாக குர்பானி கொடுக்க வசதியிருந்தும் போதிய இட வசதி இல்லாததால் கூட்டுக் குர்பானி கொடுத்து தம்முடைய தியாகத்தை நிறைவு செய்துவிடுகின்றனர். எனவே இவர்களைப் போன்றவர்களும் தாமே சுயமாக அறுத்துப் பலியிட வசதியாக ஒவ்வொரு பகுதியிலும் `அறுக்குமிடம்` ஒன்றை ஏற்படுத்தினால் அது அனைவருக்கும் வசதியாக இருக்கும். விசாலமான இட வசதி உள்ள பள்ளிவாசல்களில் இத்தகைய வசதியை ஏற்படுத்தலாம். விசாலமான இடம் உள்ளவர்கள் பொது நலனையும் நன்மையையும் நாடி இத்தகைய அறுக்குமிடத்தை ஏற்படுத்தலாம். ஆங்காங்கே உள்ள அரபி மதரசாக்களிலும் இவ்வசதியை ஏற்படுத்தலாம். நிறைய ஆடு , மாடுகள் அறுக்கப்படுவதால் நிறைய ஏழைகள் பயனடைவர்.
லேபிள்கள்:
அறுக்குமிடம்,
குர்பானி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக