_________
இன்று (18.12.2024) உலகம் முழுவதும் #அரபுமொழிநாள் மேற்கொள்ளப்படுகிறது.
ஐ நா வில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளுள் ஒன்று அரபி ஆகும். இது 1973 ஆம் ஆண்டு #டிசம்பர்18 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டதால் அந்த நாளையே #உலகஅரபுமொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமிய மார்க்கத்தின் மூலங்களான குர்ஆனும் நபிமொழிகளும் அரபியில் இருப்பதால் நாம் ஒவ்வொருவரும் அரபியைக் கற்க வேண்டும்.
'ஓரெழுத்துக்குப் பத்து நன்மை' என்பதால் திருக்குர்ஆனை அரபியில் ஓதக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இன்று வரை அம்மொழி பயன்பாட்டில் இருக்கிறதென்றால், திருக்குர்ஆன்தான் காரணம். அது அரபியில் இருப்பதால், பிற மொழி பேசும் மக்களும் அதைக் கற்றுக்கொண்டு ஓதி வருகின்றார்கள்; பலர் அதை மனனம் செய்துள்ளார்கள்.
பள்ளிக்கூடங்களில் கல்லூரிகளில் பயில்கின்ற மாணவர்கள் விருப்பப் பாடமாக அரபியைத் தேர்ந்தெடுக்கலாம். தடை இல்லை.
சிவில் எக்ஸாம் - #குடிமைத்தேர்வுகள் எழுதுவோரும் தம் விருப்பப் பாடமாக அரபியைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது பலருக்குத் தெரியாது.
அரபி மொழியை எளிதாகக் கற்க இன்று பல்வேறு உத்திகள் கையாளப்படுகின்றன. எளிமையான விதத்தில் கற்றுக்கொள்ள ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. அத்தோடு வலையொளி -யூ டியூபில் ஏராளமான காணொலிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றைப் பார்த்தும் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்.
ஆக இன்று அரபியைக் கற்றுக்கொள்ள ஏராளமான வழிகள் இருந்தும் நம்முள் பலர் திருக்குர்ஆனை அரபியில் ஓதத் தெரியாமல் இருக்கலாமா?
இதோ இப்போதே இதைச் சொடுக்குங்கள்; திருக்குர்ஆனை மூல மொழியான அரபியில் ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்:
https://youtu.be/LKBGmL6bXGM?feature=shared
அன்புடன்
நூ.அப்துல் ஹாதி பாகவி
18.12.2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக