மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ், அல்ஹாஜ் சதீதுத்தீன்
ஃபாஸில் பாகவி அவர்களின் தலைமையின்கீழ் இயங்கிவரும் அல்ஹுதா அரபிக் கல்லூரியில் 09 01
1437 (23.10.2015) ஆஷூரா நாளை முன்னிட்டு மன்பவுல்ஹுதா மாணவ மன்றத்தில் சமுதாய
முன்னேற்றத்தில் பெரிதும் பங்கு வகிப்பது யார்? எனும் தலைப்பில்
கருத்தரங்கு நடைபெற்றது. அதில் அக்கல்லூரியின் மாணவர்கள் எஸ். சதாம் அன்வர் - உமராக்களின்
களப்பணியே எனும் தலைப்பிலும் ஐ. முஹம்மது ஷபீர்
- பெண்களின் நல்லறமே எனும் தலைப்பிலும் எச். ரஹ்மத்துல்லாஹ் - செல்வந்தர்களின் கொடையே
எனும் தலைப்பிலும் எம். முஹம்மது முஹ்யத்தீன் - இளைஞர்களின் எழுச்சியே எனும் தலைப்பிலும்
எம். துஃபைல் அஹ்மது - உலமாக்களின் சேவையே எனும் தலைப்பிலும் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தனர்.
இனிய திசைகள் துணை ஆசிரியர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி இதில் நடுவராகப் பொறுப்பேற்று
கருத்துரை வழங்கினார்.
மேலும் சமுதாய முன்னேற்றத்திற்குக்
கல்வியின் அவசியம் என்ன, அதைப் பெற்றுக்கொண்டிருக்கின்ற மாணவர்களின் பொறுப்பு என்ன, அவர்கள் எப்படியெல்லாம்
தம்மை முன்னேற்றப்படுத்திக்கொள்ள முனைய வேண்டும், எந்தெந்தத் துறைகளிலெல்லாம்
முன்னேற வேண்டும், எதிலெல்லாம் மாணவர்களுக்கு வாய்ப்பிருக்கின்றது, மொழிபெயர்ப்புத்
துறையின் பயன் என்ன, அதில் எவ்வாறு தம்மை ஈடுபடுத்திக்கொள்வது, பத்திரிகைத்துறையில்
எவ்வாறு காலடி பதிப்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாணவர்களிடையே பரிமாறிக்கொண்டார்.
கருத்தரங்கில் கலந்துகொண்டு தெளிவான கருத்துகளை
எடுத்துரைத்த மாணவர்களுக்குக் கல்லூரி முதல்வர் சதீதுத்தீன் ஃபாஸில் பாகவி பரிசுகளை
வழங்கிப் பாராட்டினார்.
-பாகவியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக