செவ்வாய், 19 பிப்ரவரி, 2013
சனி, 9 பிப்ரவரி, 2013
நபிகள் நாயகத்தைக் கனவில் காணமுடியுமா?
08 02 2013 (வெள்ளிக்கிழமை) அன்று பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள மஸ்ஜித் கதீம் -இல் என்னுடைய சொற்பொழிவு.
நபிகள் நாயகத்தைக் கனவில் காணமுடியுமா?
நபிகள் நாயகத்தைக் கனவில் காணமுடியுமா?
லேபிள்கள்:
நபிகள் நாயகத்தைக் கனவில் காணமுடியுமா?
புதன், 6 பிப்ரவரி, 2013
தமிழ் பயான்கள் 3
அளவோடு உண்டு வளமோடு வாழ்வோம் !
அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்வுக்கே!
ரஹ்மானாகிய அல்லாஹ்வின் அடியார்கள்
நபி மீது நேசம் கொள்வது எப்படி?
யா அய்யுகல்லதீன ஆமனூ 1
யா அய்யுகல்லதீன ஆமனூ 2
நபியே அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்
உபரித் தொழுகைகளை உதறிவிடாதீர்கள்!
நபிவழியை (சுன்னத்தை)ப் பின்பற்றுவோம்!
யாசீன் உள்ளே இருப்பதென்ன?
அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்வுக்கே!
ரஹ்மானாகிய அல்லாஹ்வின் அடியார்கள்
நபி மீது நேசம் கொள்வது எப்படி?
யா அய்யுகல்லதீன ஆமனூ 1
யா அய்யுகல்லதீன ஆமனூ 2
நபியே அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்
உபரித் தொழுகைகளை உதறிவிடாதீர்கள்!
நபிவழியை (சுன்னத்தை)ப் பின்பற்றுவோம்!
யாசீன் உள்ளே இருப்பதென்ன?
புதன், 16 ஜனவரி, 2013
தாய்ப்பால் வங்கி
தென்னிந்தியாவில் முதல் முதலாகக் கோவையில் தாய்ப்பால் வங்கி (15.12.2012)
தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ எடைக்குக் குறைவாகப் பிறந்த குழந்தைகளுக்கும்
தாய்ப்பால் இல்லாத பெண்களின் நோய்வாய்ப்பட்ட
குழந்தைகளுக்கும் தாய்ப்பால் வங்கியில் இருந்து பால் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டியவர் ஹலீமா அஸ்ஸஅதிய்யா (ரளி) எனும்
செவிலித்தாய்தான். செவிலித்தாயர் மூலம் குழந்தைகளுக்குப் பாலூட்டும்
பழக்கம் அன்றைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை இருந்துவருகிறது. ஆனால் அக்காலச் செயல்பாடுகளுக்கும்
இக்காலச் செயல்பாடுகளுக்கும் இடையே அறிவியல் வளர்ச்சிதான் வித்தியாசத்தைக் காட்டுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குருதி குத்தி எடுத்தல் எனும் மருத்துவ முறையை மேற்கொண்டிருக்கிறார்கள்.
அதாவது குருதியைக் குத்தி எடுப்பவர், அதைக் குத்தி எடுத்துக் கீழே துப்பிவிடுவார். அல்லது ஒன்றாகச்
சேர்த்து ஓரிடத்தில் புதைத்துவிடுவார். அது அறிவியல் வளர்ச்சி இல்லாத காலம். ஆனால்
இன்றைக்கு அதேசெயல் குருதிக்கொடை எனும் பெயரில் வழங்கப்படுகிறது. தாமாக முன்வந்து
குருதியைத் தானம் செய்வோரிடமிருந்து குருதியைப் பெற்று, அந்தக் குருதி முறைப்படி சேமிக்கப்பட்டு,
அறிவியல் முறைப்படி
பாதுகாக்கப்படுகிறது. தேவைப்படும்போது அது பிற மனிதர்களின் உயிர்களைக் காக்க உதவுகிறது.
இவ்வாறு அன்றைய செயல்பாடுகளுக்கும் இன்றைய செயல்பாடுகளுக்கும் நிறைய வித்தியாசங்கள்
உள்ளன. அறிவியல் வளர்ச்சிக்கேற்ப மாறிவரும் மனிதர்களின் செயல்பாடுகளை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில்
ஆய்வு செய்து மக்களுக்குத் தெளிவைக் கொடுப்பது இஸ்லாமிய அறிஞர்களின் கடமையும் பொறுப்பும்
ஆகும். அந்த வகையில் தற்காலத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளதுதான் தாய்ப்பால் வங்கி.
அவசர யுகத்தில் செவிலித்தாயர்களைத் தேடி அலைவதும்
அவர்களிடம் தம் குழந்தைக்கு அமுதூட்டுமாறு கேட்பதும் சிரமம். அதனால் தாய்ப்பால் மிகுந்த
பெண்களிடமிருந்து உபரியான தாய்ப்பாலைப் பெற்று அதை முறையாகப் பதப்படுத்தி வைத்து,
தாய்ப்பால் தேவைப்படும்
பிற குழந்தைகளுக்கு ஊட்டுவது எனும் புதுமுயற்சிதான் தாய்ப்பால் வங்கியாகும்.
இத்தகைய தருணத்தில் ஒரு முஸ்லிம் பெண் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் பற்றாக்குறை காரணமாக இந்தத் தாய்ப்பால் வங்கியை
அணுகி அங்கிருந்து பாலூட்ட முற்பட்டால் அவள் கவனிக்க வேண்டிய இஸ்லாமியச் சட்ட நுணுக்கங்கள்
சில இருக்கின்றன. அவற்றைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்பவே அவள் தன் குழந்தைக்கு
அங்கிருந்து தாய்ப்பாலூட்ட முடிவு செய்ய வேண்டும்.
1. அந்தத் தாய்ப்பால் ஒரு முஸ்லிம் பெண்மணி உடையதா என்று கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் ஒருவனின்
இறைநம்பிக்கை தாய்ப்பாலிலிருந்துதான் தொடங்குகிறது.
தாய்ப்பால் ஊட்டும்போதே அதனுள் இறைநம்பிக்கையும் இணைத்தே ஊட்டப்படுகிறது.
2. அந்தப் பால் எந்தப் பெண்மணி உடையது என்று தெரிந்துகொள்வது முற்றிலும் அவசியம்.
ஏனெனில் அக்குழந்தைக்கு எந்தப் பெண்ணுடைய பால் ஊட்டப்படுகிறதோ அந்தப் பெண் அக்குழந்தையின்
செவிலித்தாய் ஆவாள். அந்தத் தாயின்
பிள்ளைகள் அக்குழந்தையின் சகோதர சகோதரிகள் ஆவர். மேலும் அப்பெண்மணியின் இரத்த உறவுகள்
அக்குழந்தையின் உறவினர்கள் ஆவர். எனவே அக்குழந்தை வளர்ந்து பெரியவனாக அல்லது பெரியவளாக
ஆகிவிட்டால் அவர்களோடு திருமண உறவு வைத்துக்கொள்ளக்கூடாது.
அது தவிர தன் சொந்த உறவினரோடு என்னென்ன சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமோ அவை
அனைத்தும் இந்தக் குழந்தைக்கும் அந்தக் குடும்பத்தினருக்கும் இடையே பேணப்பட வேண்டும்.
அடுத்து, ஒரு செவிலித்தாய்க்கு இஸ்லாம் என்னென்ன
சட்டம் சொல்கிறதோ அதுவே தாய்ப்பால் வங்கிக்குத் தன் உபரியான தாய்ப்பாலைத் வழங்குகின்ற
ஒரு முஸ்லிம் பெண்மணிக்கும் பொருந்தும். ஒரு செவிலித்தாய் தான் ஈன்றெடுத்த பிள்ளைகளுக்கு
அமுதூட்டியபின்னரே மற்றொருத்தி பெற்றெடுத்த பிள்ளைக்கு அமுதூட்ட வேண்டும். அதேபோல்
தற்காலத்தில், தன் பிள்ளைக்கு ஊட்டியதுபோக உபரியாக ஊறிவருகின்ற பாலைப் பீய்ச்சிக் கீழே ஊற்றாமல்
பிற குழந்தைகளுக்குப் பயன்படட்டுமே என்ற நல்லெண்ணத்தில் அதைத் தாய்ப்பால் வங்கிக்கு
வழங்குவது குற்றமாகாது.
குருதிக்கொடை வழங்கும்போது யாரும் அதற்காகப் பணம் பெறுவதில்லை. அதனால்தான் அது
குருதிக்கொடை என்று வழங்கப்பெறுகிறது. அதேபோன்ற விதியே தாய்ப்பால் வழங்குவதிலும்
பின்பற்றப்பட வேண்டும். அமுதக்கொடையாக வழங்கப்பட வேண்டுமேயன்றி அதை விற்பனை செய்யக்கூடாது.
தற்காலத்தில் அலுவலகப் பணிகளுக்குச் செல்கின்ற பெண்கள் தம் அலுவலக நேரத்திலிருந்து மாலை வரை தாம் ஈன்ற சிசுக்களுக்குத்
தாய்ப்பால் ஊட்ட முடிவதில்லை. அந்த நேரத்தில் ஊறுகின்ற தாய்ப்பாலைச் சேகரித்து மாலையில்
வீடு திரும்பியதும் தம் சிசுக்களுக்கு ஊட்டுகின்ற விதத்தில் சேமித்து வைக்கத்தக்க சாதனங்கள்
இன்று விற்பனையில் உள்ளன. அவற்றை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்படி, அறிவியல் வளர்ச்சிக்கேற்ப மாற்றமடைந்து வருகின்ற செயல்பாடுகளில் இஸ்லாமியச் சட்டங்களை
எவ்வாறு பின்பற்றுவது என்றும் அதற்கான இஸ்லாமிய நடைமுறை என்ன என்றும் மார்க்க அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு
மக்கள் தம் செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் எல்லா நவீனச் செயல்பாடுகளுக்கும்
இஸ்லாமிய மார்க்கத்தில் தீர்வு உள்ளது.
லேபிள்கள்:
செவிலித்தாய்,
தாய்ப்பால்,
தாய்ப்பால் வங்கி
திங்கள், 17 டிசம்பர், 2012
இடையில் நுழையாதே! (சிறுகதை)
-பாகவியார்
அப்ஷர் உடைய அன்னை சுல்தானா தன்னுடைய மகனுக்குப் பெண் பார்த்துக்கொண்டிருந்தாள்.
சொந்தம் விட்டுப் போகக் கூடாதென்று தன்னுடைய அண்ணன் ஆஸிப் வீட்டுப் படியேறி அவருடைய
மகள் ருகையாவைத் தன்னுடைய மகனுக்குப் பெண் கேட்டாள்.
தங்கைக்கும் அண்ணனுக்கும் நீண்டகால இடைவெளி இருந்தது. ஏதோ ஒரு பிரச்சனைக்காக நீண்ட
காலம் இருவரும் பேசாமலே இருந்துவிட்டார்கள். இருந்தாலும் தன் மகனின் திருமணத்தின் மூலம்
அப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்து, இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஒரு நல்லுறவு மலர வேண்டுமென நினைத்தாள்
சுல்தானா. அதனால்தான் தன் அண்ணன் மகளைப் பெண் கேட்ட அவர் வீட்டுப் படியேறினாள்.
நீண்ட காலம் பார்க்காத தங்கையை இன்று பார்த்த மகிழ்ச்சியில் பேச வார்த்தையின்றித்
திகைத்துப்போய் நின்றான் ஆஸிப். சுல்தானா, தான் வந்த விசயத்தை அண்ணனிடம் கூறியதும்,
என் மகளை உன் மகனுக்குத்
திருமணம் செய்துதரச் சம்மதித்தான். பின்னர் ஒரு நாள் உறவினர்கள் அனைவரின் முன்னிலையில்
நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ஆனால் இந்தச் சம்பந்தம் ஆஸிபின் மனைவி ஸைத்தூனுக்குப் பிடிக்கவில்லை. நீண்ட காலம்
இவர்களை அண்டவிடாமல் வைத்திருந்தேன். இப்போது திருமணம் என்ற பெயரில் அண்ணனும் தங்கையும்
ஒன்று சேர்ந்துவிட்டார்களே. இதை எப்படியாவது முறியடிக்க வேண்டுமே என்று பொருமிக் கொண்டிருந்தாள்.
தன்னுடைய அண்ணனுக்கு போன் செய்து நீங்க உங்களோட மகனுக்கு என்னோட மகளைப் பெண்
கேட்டு வாங்க அண்ணே. இன்னைக்கே வந்தீங்கன்னா நான் என்னோட கணவரிடம் சொல்லி அவரை வீட்லயே இருக்கச் சொல்வேன்.
என்ன சொல்றீங்க? என்று கேட்டாள் ஸைத்தூன்.
சரி தங்கச்சி. நான் இன்னைக்கே வாறேன் எனச் சொல்லிவிட்டு அவளுடைய அண்ணன் போனை வைத்தான்.
ஐம்பது பவுனும் ஒரு இலட்சம் பணமும் கொடுக்குறதாச் சொல்லியிருக்கார் கணவர். அது தன்னோட அண்ணனுக்குத்தான்
போய்ச் சேரணும். அவரோட தங்கச்சிக்குப் போய்ச் சேர்ந்துவிடக் கூடாதுன்னு நினைத்தாள்
ஸைத்தூன்.
இந்த விசயத்தைத் தன்னோட கணவர் ஆஸிபிடம் சொன்னாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
அவன் ஓர் அப்பாவி. மனைவி சொன்ன பேச்சுக்குத் தலையாட்டுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவன்.
என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான். ஏற்கெனவே என்னோட தங்கச்சிக்கு வாக்குக் கொடுத்துட்டேன்.
இப்ப நீ திடீர்னு எங்க அண்ணனெ வரச் சொல்றேன்னு சொல்லுறியே? இத நான் எப்படி அவளிடம் சொல்வது?
என்றான்.
ஒங்களுக்கு ஒண்ணும் தெரியாது. இத்தன வருஷமா பேசாம இருந்த ஒங்க தங்கச்சி இப்ப எதுக்காகப்
பொண்ணு கேட்டு வாரா தெரியுமா? உங்க மேல உள்ள பாசத்தால வரல. நாம நம்ம பொண்ணுக்குக் கொடுக்கப்
போற பணத்தையும் நகையையும் பார்த்து வந்திருக்கா. அதனால நம்ம பொண்ணுக்குத் தகுந்த
ஜோடி எங்க அண்ணெ மகன்தான். படிப்புக் குறைவா இருந்தாலும் நல்ல வேலையில இருக்கான்.
நல்லா சம்பாதிக்கிறான். அவனுக்கு என்ன கொறை? அதனால ரொம்ப யோசிக்காம எங்க அண்ணன
வரவேற்கத் தயாராகுங்க என்று படபடவெனப் பேசி முடித்தாள் ஸைத்தூன்.
மறுநாள், ஆஸிப் தன்னோட தங்கச்சிக்கு போன் செய்தான். சுல்தானா, கோவிச்சுக்காதேம்மா. என்னோட மனைவியின்
பிடிவாதத்தால, என் மகளெ அவளோட அண்ணெ மகனுக்குக் கட்டிக் கொடுக்குறதா சொல்லிட்டேன். அடுத்த மாசம் கல்யாணம் வச்சிருக்கோம்.
நீ கண்டிப்பா வரணும்- என்று சொல்லிவிட்டு,
ஆளை விட்டால் போதும்னு போனை வைத்துவிட்டான்.
அடுத்த நாள் சுல்தானாவைப் பார்க்க அவளுடைய தங்கை ஷபானா வந்தாள். என்னக்கா நான்
கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா? என்றாள்.
ஆமா, உண்மைதான்
ஷபானா! என்று ஒற்றை வரியில் பதிலளித்தாள் சுல்தானா.
உன்னோட மகன் அப்ஷருக்கு ஆஸிப் அண்ணனிடம் பெண் கேட்டு நிச்சயதார்த்தம் முடிஞ்சுருச்சு.
பிறகு எப்படிக்கா, அண்ணியோட அண்ணன் மகனுக்குத் திருமணம்
செய்துகொடுக்க நம்ம அண்ணனுக்கு மனசு வந்துச்சு? பேசுறது ஒண்ணு, செய்யுறது ஒண்ணா? ஏன் நம்ம அண்ணெ இப்படி இருக்காங்க?
என்று தன் மனவேதனையை
வெளிப்படுத்தினாள் ஷபானா.
நம்ம அண்ணனெச் சொல்லிப் பிரயோஜனம்
இல்லை ஷபானா. நம்ம அண்ணிதான் எல்லாத்துக்கும் காரணம். ஆரம்பத்திலேர்ந்து நம்மளையும்
நம்ம குடும்பத்தையும் ஒட்டவிடாம பண்ணிட்டாங்க. கூட்டுக் குடும்பமா இருந்த நம்ம குடும்பத்திலிருந்து முதன் முதலாப் பிரிஞ்சு போனது
அவங்கதானே? அன்றிலிருந்து இன்று வரை நம்ம குடும்பத்த
தூரமா வச்சுத்தானே பாக்குறாங்க? நாம என்ன செய்யிறது? எல்லாம் இறைவன் போட்ட விதி என்று
மனம் நொந்து கூறினாள் சுல்தானா.
ஏக்கா, நிச்சயதார்த்தம் தானே முடிஞ்சிருக்கு. கல்யாணம் இன்னும் முடியலையே. வாக்கா,
நாம போயி அந்த நிச்சயத்தை
முறிச்சுட்டு நம்ம பையனுக்கு அந்தப் பொண்ணெக் கேப்போம் என்று ஆதரவாகக் கூறினாள்.
அப்படி நாம் ஒருபோதும் செய்யக் கூடாது ஷபானா. ஒனக்கு ஒரு ஹதீஸ் தெரியாதா?
ஒரு வியாபார ஒப்பந்தம்
நடந்துட்டு இருக்கும்போது இடையில் மற்றொருவர் குறுக்கிட்டு அந்தப் பொருளை வாங்கக்
கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்காங்க. திருமணமும் ஒரு ஒப்பந்தம்தான்.
அத, ஞாபகத்தில்
வைத்துக்கொண்டுதான் நான் பொறுமையா இருக்கேன். நம்ம அண்ணி ஹதீஸெல்லாம் படிச்சிருந்தாலும்
அதையெல்லாம் மறந்துட்டாங்க. ஆனா, நான் இந்த ஹதீஸை ஞாபகத்தில் வச்சுக்கிட்டுத்தான் பொறுமையா இருக்குறேன்.
அதனால, நாம்
அவங்களோட ஒப்பந்தத்தை முறிச்சு, அதச் செய்த பாவியாக ஆக வேண்டாம். விதிப்படி எல்லாம் நன்றாக நடக்கும்
என்று உறுதியாகச் சொன்னாள் சுல்தானா.
அக்காவின் நல்ல மனசு யாருக்கு வரும் என்று தன் மனதில் நினைத்தவளாய் ஷபானா புறப்பட்டாள்.
லேபிள்கள்:
ஆஸிப்,
கணவர்,
சிறுகதை,
நிச்சயதார்த்தம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






