-----------------------------
‘சென்னை
மாவட்ட காஜி’ எனும் உயர்பொறுப்பு பிற மாவட்ட காஜி பொறுப்பைப் போன்றது கிடையாது.
‘சென்னை மாவட்ட காஜி’யே தமிழ்நாட்டின் ‘தலைமை காஜி’யாகப் பார்க்கப்படுகிறார்.
இதுவரை அவ்வாறுதான் நடைமுறை இருந்து
வருகிறது. ஆகவே தகுதியானவரைத் தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்று பொதுமக்களும்
உலமாக்களும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
‘சென்னை
மாவட்ட காஜி’ பதவிக்கு நால்வர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களுள் மூவரே அரசின்
நிபந்தனைகளுக்கேற்ற கல்வித் தகுதியைப் பெற்றிருந்தனர். அவர்களுள் ஒருவர் ‘ஆலிம்’
எனும் வட்டத்திற்குள் இல்லாதவர் ஆவார்.
நியமனக்
குழுவினர் தேர்வு செய்து கொடுத்த அடிப்படையிலும், பொதுமக்கள், உலமாக்கள் ஆகியோரின் எதிர்பார்ப்பின் அடிப்படையிலும், மூவருள் மிகத் தகுதியானவர் என்ற அடிப்படையிலுமே
தற்போதைய ‘சென்னை மாவட்ட காஜி’ தமிழக முதல்வரால் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்
என்பதை மக்கள் மன்றத்திற்குச் சமர்ப்பித்துக்கொள்கிறேன்.
‘சென்னை
மாவட்ட காஜி’ பதவிக்குப் போட்டியிட்டுத், தேர்வு
செய்யப்படாத ஆலிம்கள் இருவர் அமைதியாக இருக்கும்போது, ஆலிம் அல்லாத அந்த ஒருவரும், அவர் சார்பாகச் சிலரும் மக்கள் மத்தியில் குழப்பத்தை
ஏற்படுத்த முனைவது ஏற்புடையதன்று.
‘காஜி’ பதவியானது வாரிசு அடிப்படையிலோ, மொழி அடிப்படையிலோ வழங்கப்படுவதில்லை. மாறாக முழுக்க முழுக்கத் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுவதாகும். ஆகவே மிகத் தகுதியானவரான மௌலானா மௌலவி முஃப்தி என்.பீ. உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அவர்களைத் தமிழக முதல்வர் நியமனம் செய்து அறிவித்தது மிகச் சரியானதும் நியாயமானதும் ஆகும் என்பதைப் பொதுமக்களின் சார்பாகவும் உலமாக்களின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகத்
தகுதியானவரை ‘சென்னை மாவட்ட காஜி’யாகத் தமிழக முதல்வர் நியமனம் செய்ததைப் பாராட்டி, உலமாக்கள் சார்பாக அவருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்புடன்
மௌலவி
நூ. அப்துல் ஹாதி பாகவி
பட்டினம்பாக்கம், சென்னை-28
19 10
2025
================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக