திங்கள், 13 அக்டோபர், 2025

மருத்துவர்களே! ஒரு நாளையேனும் அறத்திற்காக ஒதுக்குங்கள்!


---------------------------------------------------------

மருத்துவர்களே! 

உங்களிடமோ வழக்கறிஞரிடமோ ஒருவர் அரை மணி நேரம் இலவசமாக ஆலோசனை செய்துவிட்டு வரமுடியுமா? முடியாது. ஏனெனில் உங்களின் நேரம் அவ்வளவு மதிப்புமிக்கது; இச்சமுதாய மக்களுக்கானது. எனவே உங்களைச் சந்திக்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 


இருப்பினும் ஆண்டு முழுவதும் இவ்வாறு சம்பாதித்துக்கொண்டேதான் இருக்க வேண்டுமா? “இச்சமுதாயத்திற்கு நாம் செய்யும் அறம் என்ன? இச்சமுதாயத்திற்கு நம் கல்வியால் பயன் என்ன?” என்று நீங்கள் ஒரு நாளேனும் சற்று யோசித்துப் பார்த்தீர்களா?


ஆம். இச்சமுதாயத்தைச் சேர்ந்த கடைநிலை மக்கள் பலர் மருத்துவச் சேவை கிடைக்காமல் முடங்கிப்போய்க் கிடக்கின்றார்கள்; மருத்துவத்திற்காகச் செலவுசெய்ய முடியாமல் தவிக்கின்றார்கள்; பள்ளிவாசல்தோறும் யாசகம் கேட்டு நிற்கின்றார்கள். அவர்களுக்காக மாதந்தோறும் ஒரு நாள் ஒதுக்குங்கள். நீங்களும்  உங்கள் நண்பர்களும் ஒன்றிணைந்து உங்கள் பகுதியில் (மஹல்லா) ஒரு நாள் இலவச மருத்துவ முகாம் நடத்தி, அதில் இலவச ஆலோசனையும் சிகிச்சையும் வழங்குங்கள். இதுவே உங்கள் கல்வியால் இச்சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் அறச் செயலாகும் என்பதை உணருங்கள். 


வழக்கறிஞர்களே!

நீங்களும் உங்கள் நண்பர்களும் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு நாள் இலவசச் சட்ட முகாம் நடத்தி, அவர்களுக்கு இலவசமாகச் சட்ட உதவிகளை வழங்குங்கள்; வழக்குகள் குறித்த தெளிவை வழங்குங்கள்.  எவ்வாறு வழக்குத் தொடுப்பது, எவ்வாறு சமாதான உடன்படிக்கை செய்துகொள்வது, எவ்வாறு சட்டக் கல்வி பயில்வது உள்ளிட்ட பல்வேறு வியங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள். 


இதுவே நீங்கள் உங்கள் கல்வியின் மூலம் இச்சமுதாயத்திற்குச் செய்யும் அறமாகும் என்பதை உணருங்கள். 

அன்புடன் 

மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி 

13 10 2025 

===================================






கருத்துகள் இல்லை: