---------------------------------------
“பனூ இஸ்ராயீல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு பூனையின் காரணத்தால் வேதனை செய்யப்படுவதை நான் பார்த்தேன். அவள் தனது பூனைக்குத் தீனி போடாமல் கட்டிப்போட்டு வைத்திருந்தாள். அவள் அதை பூமியிலுள்ள புழுப்பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து)விடவுமில்லை (இதன் காரணமாகவே அவள் நரகம் சென்றாள்.)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: 1651)
ஆட்சியாளர்கள் தற்போதைய சூழ்நிலை கருதி, மக்களை வீட்டுக்குள் அடைத்துப்போட்டது தவிர்க்க இயலாதது.
இருப்பினும் அவர்களுக்கான உணவுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமல்லவா? வெளியில் விடாமல் வீட்டுக்குள் அடைத்துப்போட்டு, உதவித்தொகையும் கொடுக்காமல் விட்டுவிட்டால் அவர்கள் தமக்கான
வாழ்வாதாரத்தை எப்படிப் பெறுவார்கள்? இதற்கு ஆட்சியாளர்கள்தாம் பதில் சொல்ல
வேண்டும்.
நூ. அப்துல் ஹாதி பாகவி
22 04 2020 27 08 1441 =====================
22 04 2020 27 08 1441 =====================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக