ஞாயிறு, 26 மே, 2019

ஸதகத்துல் ஃபித்ர் எவ்வளவு?



இப்னு உமர் (ரளி) அவர்கள் கூறியதாவது: முஸ்லிம்களில் அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், சிறியவர், பெரியவர் ஆகிய அனைவருக்காகவும் ஒரு 'ஸாஉ' அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு 'ஸாஉ' அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் புறப்படுவதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள். (நூல்: புகாரீ: 1503)


'முத்'து என்பது சுமார் 533 கிராம் எடை கொண்ட ஓர் அளவை ஆகும். நான்கு 'முத்'துகள் கொண்டது ஒரு 'ஸாஉ' (533X4=2132) ஆகும். ஒரு 'முத்'து என்பது இன்று சுமார் 687 கிராம் எடை கொண்ட ஓர் அளவை என்றும் அறிஞர்களுள் சிலர் கூறுகின்றனர். (687X4=2748)


ஆகவே 2132-க்கும் 2748-க்கும் இடைப்பட்ட அளவாகவே 2500 கிராம் (2 1\2 கிலோ) என நடுநிலையாக ஓர் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவோம்.


ஒரு கிலோ அரிசி குறைந்தபட்சம் நாற்பது ரூபாய் என்று கணக்கிட்டால் 2 1\2 கிலோ அரிசி நூறு ரூபாய் ஆகிறது.


ஒவ்வொரு குடும்பத்திலும் ஐந்து உறுப்பினர்கள் என்றால் ஒரு குடும்பத்திற்கு ஐநூறு ரூபாய் ஆகிறது.


இதைச் சரியாக வசூல் செய்து உரிய ஏழைகளுக்கு வழங்குவது ஒவ்வொரு ஜமாஅத்தின் கடமை என்பதை உணர்வோம்.


ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அந்தந்த நிர்வாகிகள் ஒரு வசூல் பெட்டி வைத்து அதில் மக்கள் தம் ஸதகத்துல் ஃபித்ரைப் போட ஏற்பாடு் செய்து, அதை அந்தந்த மஹல்லாவில் உள்ள ஏழைகள், அநாதைகள், விதவைகள் உள்ளிட்டோருக்குப் பங்கிட்டுக் கொடுக்கலாம்.


(இதை நான் இமாமாக உள்ள பள்ளியில் கடந்த நான்கு ஆண்டுகளாகச் செய்து வருகிறேன் என்பதைத் தகவலுக்காகத் தருகிறேன்.)


மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, மணலி.
26.05.2019 20.09.1440




கருத்துகள் இல்லை: