வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

பன்றிக்காய்ச்சல்-முஸ்லிம்களைத் தாக்குவதில்லை


இன்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகின்ற பன்றிக் காய்ச்சல் பன்றியின் மூலம் பரவுவதில்லை என்பது பலருக்குத் தெரியாது. அது ஒரு நுண்ணுயிர்க் கிருமியால் பரவுகிறது. அல்லாஹ் பிர்அவ்னுக்கு அனுப்பிய பல்வேறு சோதனைகளைப் போல்தான் இப்போது நம்மிடையே பரவிவருகின்ற பறவைக் காய்ச்சல் பன்றிக்காய்ச்சல் போன்றவை ஆகும்.

ஆனால் இது முஸ்லிம்களைப் பெரும்பாலும் தாக்குவதே இல்லை. ஏனென்றால். அண்மையில் ஜெர்மன் பல்கலைக் கழகத்தில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் கிடைத்த தகவலின்படி, இந்நோய்க் கிருமிகள் மூக்குத் துவாரங்களின் வழியேதான் மிக வேகமாகப் பரவுகின்றன. ஆனால், முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள் ஐவேளைத் தொழுகைக்காக உழூ செய்கின்றபோது தம்முடைய மூக்கையும் சிந்தி சுத்தம் செய்வதால் அந்நோய்க் கிருமிகள் அவர்களை எளிதில் தாக்கமுடிவதில்லை.

என்னே நபி (ஸல்) அவர்களின் உன்னதமான வழிமுறை! என்னே மகிமை! எனவே முஸ்லிம் சகோதர சகோதரிகளே! ஐவேளைத் தொழுகையைக் கடைப்பிடியுங்கள். தவறாமல் மூக்கைச் சிந்தி சுத்தம் செய்யுங்கள்.
அல்லாஹ் நம் யாவரையும் தொற்றுநோய்ப் பீதியிலிருந்தும் அது தாக்குவதிலிருந்தும் காப்பானாக!

கருத்துகள் இல்லை: