புதன், 1 ஜனவரி, 2020

நூல் அறிமுகம்


==============


திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து ஓதுவது ஒரு சுகம் என்றால், அதனை தஜ்வீத் சட்டங்களைப் பேணி, இனிய தொனியில் ஓதுவது மற்றொரு சுகம். திருக்குர்ஆனை இனிய தொனியில் நிறுத்தி நிறுத்தி ஓதுமாறு அல்லாஹ்வும் அவனுடைய திருத்தூதரும் நமக்குக் கட்டளையிடுகின்றார்கள்.

தஜ்வீத் சட்டங்களைப் பேணி ஓத எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் இதோ தாருல் ஹுதா ஒரு நூலை வெளியிட்டுள்ளது. எழுத்துகளின் பிறப்பிடம் குறித்த வண்ணப் படங்களையும் வெளியிட்டுள்ளது இந்நூலின் சிறப்பாகும். நம் பிள்ளைகளுக்கேனும் இந்த நூலை வாங்கிக் கொடுத்து அதன்படி ஓதுமாறு பழக்கலாம்.

இன்று திருக்குர்ஆனை இனிய குரலில் கேட்க எத்தனையோ காணொலிகள் கிடைத்தாலும் நம் பிள்ளைகள் அதேபோன்று இனிய தொனியில் ஓதுவதைக் கேட்டால் நம் மனம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவுண்டோ? அதற்கான நம்முடைய முயற்சி என்ன?

தஜ்வீத் சட்டங்களைப் பேணி, நம் பிள்ளைகள் அழகிய தொனியில் ஓத நம்மாலான முயற்சியைச் செய்வோம். இந்நூலை வாங்கிப் பயனடைவோம்.

நூல்: இல்முத் தஜ்வீத்
வெளியீடு: தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை.
விலை: 220 ரூபாய்.
பக்கங்கள்: 248
தொடர்புக்கு: 044-25247866, 9840174121

அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி
மணலி, சென்னை.
01.01.2020





கருத்துகள் இல்லை: