திங்கள், 18 டிசம்பர், 2017

இஸ்லாமிய இலக்கியக் கழகச் செயற்குழுக் கூட்டம்



இஸ்லாமிய இலக்கியக் கழகச் செயற்குழுக் கூட்டம் 25-11-2017 அன்று காலை 11 மணிக்குச் சென்னை எஸ்-ஐஏஎஸ் அகாடமி அரங்கில் கழகத் தலைவர் பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலி தலைமையில் நடைபெற்றது. நெறியாளர்கள் கேப்டன் அமீர் அலி, டாக்டர் சே.சாதிக் முன்னிலை வகித்தனர். நாகர்கோயில், திருநெல்வேலி, திருச்சி, பெரம்பலூர், ஈரோடு, புதுக்கோட்டை, அதிராம்பட்டினம், கோட்டைக்குப்பம் மற்றும் சென்னையைச் சார்ந்த 50 செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பொதுச் செயலாளர் பேராசிரியர் அப்துல் சமது வரவேற்புரை வழங்கினார். மௌலவி முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி கிராஅத் ஓதினார். பொருளாளர் எஸ்.எஸ். ஷாஜஹான் நன்றி கூறினார். மௌலவி பஹாவுத்தீன் ஆலிம் துஆ ஓதினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப் பெற்ற தீர்மானங்கள்:-  
1. சென்னையில் ஊடகப் பயிலரங்கம், தஞ்சை அய்யம்பேட்டையில் கருத்தரங்கம், குற்றாலத்தில் பேச்சுப் பயிலரங்கம் ஆகியன நடத்துதல்.
2. சென்னையில் மாதமொருமுறை நூல் திறனாய்வு, வெளியீடு முதலியன நடத்துதல். 

3. உலமாப் பெருந்தகைகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆலிம்கள் தமிழ் மொழியில் செம்மையாக இலக்கணப் பிழையின்றி எழுதவும் பேசவும் "தேர்ச்சி வகுப்புகள்' நடத்துதல்.  

4. மாவட்டம்தோறும் கிளைகள் அமைத்து நிகழ்ச்சிகள் நடத்துதல்.
5. 2019இல் "உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாபெரும் மாநாடு' நடத்துதல்.

6. அரசு வெளியிட்டுள்ள பாடத் திட்ட வரைவை ஆய்ந்து அதில் இஸ்லாத்திற்கு ஆட்சேபகரமான பகுதிகள் இருப்பின் அதனை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லுதல்.
7. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய இருக்கை உண்டாக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளுதல்.
8. ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும் 20 தலித் சகோதரர்களுக்குத்தங்களது பிஎச்.டி., போன்ற ஆய்வுகளை நூலாக வெளியிட தலா ரூ. 20,000/- வழங்கும் திட்டத்தைச் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் முஸ்லிம் ஆய்வாளர்களுக்கும் விரிவுபடுத்திட அரசைக் கேட்டுக்கொள்ளுதல்.

மேற்கண்ட தீர்மானங்கள் செயலாக்கம் பெற அனைவரும் தங்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் தந்துதவ இஸ்லாமிய இலக்கியக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

செயற்குழுக் கூட்டத்தில் பேராசிரியர்கள்: மு.இ. அகமது மரைக்காயர், ஹாஜா கனி, புரவலர் ராஜகிரி தாவூது பாட்சா ஆகியோரும் ஊடகவியலாளர்கள்: பாத்திமா மைந்தன் ராசிக், நூருல்லாஹ், காயல் மஹ்பூப், சமரசம் அமீன், ஆ. மு. ரசூல் மொஹிதீன், மில்லத் இஸ்மாயில், வலியுல்லாஹ் ஸலாஹி, ஆர்.எஸ். தர்வேஷ் மொஹிதீன், கோம்பை நிஜாமுதீன் ஆகியோரும் மௌலவிகள்: பஹாவுத்தீன் ஆலிம், தேங்கை ஷறபுத்தீன் மிஸ்பாஹி, பீர் முஹம்மது பாகவி, முஹம்மது இல்யாஸ் ரியாஜி, நூ. அப்துல் ஹாதி பாகவி முதலானோரும் 

மூத்த எழுத்தாளர்கள்: ஏம்பல் தஜம்முல் முஹம்மது, அதிரை அஹமது, சி.ஜே. ஷாஜஹான், ஈரோடு தாஜ் முகைதீன், புதுக்கோட்டை ராஜா முகம்மது, ஏகவன் அப்துல் கரீம், தாழை மதியவன், உடன்குடி யூசுஃப் முதலானோரும் கவிஞர்கள்:  இ.பதுருத்தீன், தக்கலை ஹலீமா, சடையன் அமானுல்லாஹ், சோழபுரம் தாஹா, ஷேக் மதார் ஆகியோரும் நல்லாசிரியர்கள்: செங்கோட்டை அப்துர் ரஹ்மான், ஷேக் ரசீத் ஆகியோரும் எழுத்தாளர்கள்: திருச்சி அம்ஜத் இப்ராஹிம், கோட்டக்குப்பம் லியாகத் அலி, அரும்பாவூர் தாஹிர் பாட்சா, ஜனாபா கோரிஜான், மஃரூஃப் முதலானோரும் வழக்கறிஞர் ஷேக் தாவூது உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

============================================


கருத்துகள் இல்லை: