திங்கள், 9 ஜனவரி, 2017

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள ஜமால் முகமது கல்லூரியும், சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையும் இணைந்து தமிழ் இலக்கியங்களில் சமுதாயச் சிந்தனைகள்என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றினை 11.01.2017 (புதன்கிழமை) நடத்துகின்றன. இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பொறியாளர் இரவிச்சந்திரன் சோமு அவர்கள் (இயக்குநர், இக்சியா தொடர்பகம், சிங்கப்பூர்) கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். எழுத்தாளர் மாலன் அவர்கள் கலந்துகொண்டு கருத்தரங்கைத் தொடங்கிவைத்துத் தொடக்கவுரையாற்ற உள்ளார்.

சிங்கப்பூர்த் தமிழ்வள்ளல் திரு. எம்.ஏ. முஸ்தபா அவர்கள் கருத்தரங்க ஆய்வுக்கோவைகளை வெளியிட உள்ளார். தி சிராங்கூன் டைம்ஸ் ஆசிரியர் எழுத்தாளர் ஷாநவாஸ் அவர்கள் கருத்துரை வழங்க உள்ளார். கல்லூரி முதல்வர் முனைவர் முகமது சாலிகு அவர்களின் தலைமையில் நடைபெறும் விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் மீ.அ.ச. ஹபீபுர் ரஹ்மான் வரவேற்புரையாற்றவும், கல்லூரிச் செயலர் முனைவர் காஜா நஜீமுதீன் சாஹிப் அவர்கள் வாழ்த்துரை வழங்கவும் உள்ளனர்.

கருத்தரங்கில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் ஆய்வுக்கட்டுரைகளை வழங்க உள்ளனர். ஆய்வரங்க அமர்வுகள் தனித்தனி அமர்வுகளாக நடைபெற உள்ளன. மாலையில் நடைபெறும் நிறைவு விழாவில் பன்னாட்டுக் கருத்தரங்கின் மதிப்பீட்டு உரையைப் புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் வழங்கவும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் க. பாஸ்கரன் அவர்கள் நிறைவு விழாப் பேருரையாற்றவும் உள்ளனர். ஜமால் முகமது கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் க. சிராஜுதீன் நன்றியுரையாற்ற உள்ளார்.
-மு இளங்கோவன்

பின்குறிப்பு: இன் ஷாஅல்லாஹ் நானும் இந்தக் கருத்தரங்கில் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பிக்க உள்ளேன். துஆ செய்க.
-முனைவர் மௌலவி நூ அப்துல் ஹாதி பாகவி M.A.,M.Phil.,Ph.D.
(துணை ஆசிரியர்: இனிய திசைகள் மாத இதழ்)




கருத்துகள் இல்லை: