--------------------------------------
மௌலானா மௌலவி பி.எம். கலீலுர் ரஹ்மான் மன்பஈ தொகுத்துள்ள உம்ரா செய்முறை விளக்கம் எனும் நூலை மௌலானா மௌலவி ஓ.எம். அப்துல் காதிர் பாகவி அவர்கள் மேலாய்வு செய்து வழங்கியுள்ளார்கள். இதில் ஓ.எம். ஹள்ரத் அவர்களின் மேலாய்வுரையே மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. “ஹஜ்-உம்ரா செல்வோர் அல்லாஹ்வின் தூதுக்குழுவினர்; அவர்கள் அங்கு சென்று, உலக முஸ்லிம்களுக்குப் பொதுமன்னிப்பை வாங்கிக்கொண்டு வருகின்றார்கள்” எனும் செய்தி என் கவனத்தை ஈர்த்தது.
‘உம்ரா’ என்று சொல்லிவிட்டு, மக்கா-மதீனா சார்ந்த பல்வேறு செய்திகளைத் தந்திருப்பது, “சாக்லெட் தாறேன்” என்று சொல்லி, சிறுவர்களிடம் நாம் விரும்பும் எல்லா விஷயங்களையும் சொல்லிவிடுவதைப்போன்று இருக்கிறது.
பல்வேறு குறிப்புகளை உள்ளடக்கி 112 பக்கங்களைக் கொண்ட இந்தநூல் 60 ரூபாய் மட்டுமே. அனைவரும் வாங்கிப் படித்துப் பயன்பெறத்தக்க நன்னூலாகும் இது.
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
நூல் வெளியீடு:
அமானத் அறக்கட்டளை
251, ஹமீது பில்டிங், 2ஆம் தளம், அண்ணா சாலை, சென்னை-6
தொடர்புக்கு: 044 2855 4444, 98411 60044
========================================
1 கருத்து:
ஹள்ரத் அவர்களுக்கு நன்றி! இப்படி ஒன்றை
தாங்கள் செய்திருப்பதை
நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன்.
கருத்துரையிடுக