------------------------------------------
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் துணைத் தலைவர் மௌலவி தெஹ்லான் பாகவி அவர்களுக்கு...
ஏதோ ஒரு வேகத்தில் முடிவெடுத்துவிட்டீர்கள். பரவாயில்லை. இன்னும் வாய்ப்பிருக்கிறது. நீங்கள் கொண்டுள்ள கூட்டணியிலிருந்து உடனடியாக வெளியேறி, “தேசியக் கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளிக்கிறோம்” என்று கூறினால் போதும் முஸ்லிம் சமுதாயம் உங்களை அன்போடு உபசரிக்கவும் நேசக்கரம் கொடுக்கவும் காத்திருக்கிறது. தேர்தலுக்குப்பின் வருந்துவதைவிடப் பெரும்பான்மையான முஸ்லிம்களின் மனநிலையையும் எண்ண ஓட்டத்தையும் கருத்தில்கொண்டு தங்களின் முடிவை இப்போதே மாற்றிக்கொள்வது சாலச் சிறந்தது. இது என்னுடைய அன்பான வேண்டுகோள்.
தற்போது உங்களுக்கு ‘சீட்’ இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பொறுமையோடு காத்திருங்கள். அல்லாஹ் உங்களைத் தமிழகச் சட்டமன்றத்தில் அமர வைப்பான் என்பது உறுதி.
அன்புடன்
முனைவர் மௌலவி
நூ. அப்துல் ஹாதி பாகவி
==========================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக