விரைவில் எதிர்பார்க்கலாம்!
2011 ஜூலை முதல் 2015 டிசம்பர் வரை இப்னுமாஜா, நசாயீ ஆகிய இரண்டு நபிமொழித் தொகுப்புகளை ரஹ்மத் பதிப்பகத்திற்காகத் தமிழாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அல்லாஹ்வின் அருளால் அவ்விரண்டு நூல்களின் தமிழாக்கப்பணி முடிவடைந்ததையடுத்து என் சொந்த நூல்களை வெளியிடுவதில் கவனம் செலுத்த உள்ளேன். அதன்படி இன்ஷா அல்லாஹ் 1. பூபாள இராகங்கள் (கவிதை), 2. இறைநம்பிக்கை கொண்டோரே! 3. நபிகளார் நவின்ற மூன்றுகள் ஆகிய நூல்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.
இப்னுமாஜா, நசாயீ ஆகிய இரண்டு நபிமொழித் தொகுப்புகளையும் ஆறு பாகங்களாகத் தமிழாக்கம் செய்துள்ளேன். இன்ஷா அல்லாஹ் ரஹ்மத் பதிப்பகம் அவற்றை விரைவில் வெளியிடும் என உங்களோடு சேர்ந்து நானும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
இன்ஷா அல்லாஹ் 2018ஆம் ஆண்டில் ஸிஹாஹ் சித்தா எனப்படும் ஆதாரப்பூர்வமான ஆறு நபிமொழித் தொகுப்பு நூல்களும் தமிழில் கிடைப்பதற்கான ஏற்பாட்டை ரஹ்மத் பதிப்பகம் செய்து வருகின்றது. அப்பதிப்பகத்தாரின் எண்ணம் குறித்த காலத்தில் நிறைவேற அல்லாஹ் அருள்புரிவானாக!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக