தினமணி ஆசிரியர் இன்று (6-7-10) எழுதியிருந்த காற்றில் பறக்க விடவா பட்டம்? தலையங்கம் சற்று உற்றுநோக்கத்தக்கது. அஞ்சல் வழிக் கல்வி மற்றும் தொலைநிலைக் கல்வி மூலம் பயின்று பட்டம் பெற்ற மாணவர்களின் பட்டத்திற்கு மதிப்பில்லை என்றோ அதை வைத்துக்கொண்டு மேற்படிப்பைத் தொடர முடியாது என்றோ கூறினால் அவ்விதக்கல்லூரிகளை ஏன் அனுமதிக்க வேண்டும்? அப்படியானால் அந்தக் கல்லூரிகள் மாணவர்கள் மூலம் பணம் சம்பாதிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளனவா?
அனைத்துப் படிப்புக்கும் சமமதிப்பு வழங்கப்பட்டால்தான் படித்தோரின் சதவிகிதம் உயரும். இல்லையேல் அதுபோன்ற படிப்பைப் படித்த மாணவர்களும் இதுபோன்ற படிப்பை வழங்குகின்ற பல்கலைக் கழகங்களும் வெகுவாகப் பாதிக்கப்படும்.
நூ அப்துல் ஹாதி பாகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக