பங்களா தந்தாய்
கார் ஒன்று வேண்டுமென்றான்.
ஓலைக் குடிசையில் வாழும்
ஏழையைப் பார்-என்றான்.
குழந்தைகளைத் தந்தாய்
செல்வத்தைத் தா-என்றான்.
குழந்தையே இல்லாத
மலடியைப் பார்-என்றான்.
கையைச் சீராகப் படைத்தவனே
கைக்கடிகாரம் வேண்டுமென்றான்.
கையே இல்லாமல் வாழும்
முடவனைப் பார்-என்றான்.
காலை நன்றாகப் படைத்தவனே
காலணியைத் தா-என்றான்.
காலே இல்லாத
நொண்டியைப் பார்-என்றான்.
கண்ணைச் சிறப்பாய் அமைத்தவனே
கண்ணாடி வேண்டுமென்றான்.
கண் பார்வையற்ற
குருடனைப் பார்-என்றான்.
கருப்பாய் எனைப் படைத்தவனே
சிவப்பாய் எனை ஆக்கு-என்றான்.
குறையைப் பார்க்காதே
நிறையைப் பார்- என்றான்.
மேலும் சொன்னான்-நான்
உந்தன் உடலைப் பார்ப்பதில்லை
உள்ளத்தை தான் பார்க்கிறேன்-என்றான்.
(இக்கவிதை 01-15 ஆகஸ்டு 2001 சமரசம் இதழில் வெளிவந்துள்ளது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக