இலக்கு

* இஸ்லாமியச் சமுதாயத்தில் ஆழமாகப் பதிந்துள்ள மூடப்பழக்கங்களைக் களையப் பாடுபடுதல்.

* இஸ்லாமிய மார்க்கத்தின் பெயரால், மக்கள் தம் அறியாமையால் செய்து வருகின்ற மார்க்க முரண்பாடான செயல்களைக் களைதல்.

* இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுவதன் அவசியத்தையும் இஸ்லாமியக் கல்வியைக் கற்றுக்கொள்வதன் அவசியத்தையும் எடுத்துரைத்து விழிப்புணர்வூட்டுதல்.

* இஸ்லாமியக் கல்வியையும் உலகியல் கல்வியையும் ஒரு சேரப் பெறுவதற்கு முயற்சி செய்தல்.

* ஆலிம்களை ஒருங்கிணைத்து அவர்கள் அனைவரையும் ஒரு குடையின்கீழ் ஒருமுகப்படுத்தி, அவர்களின் வறுமையை அகற்றவும், சமுதாயத்தில் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையவும் முயற்சி செய்தல். குறிப்பாக, `பாகவிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ளும் (Net work) வசதியை ஏற்படுத்துதல்.

* ஆலிம்களை ஒன்றிணைத்து ஒரு மாபெரும் நிறுவனத்தை ஏற்படுத்தி, அதில் அவர்கள் அனைவரையும் பங்குதாரர்களாக ஆக்குதல். 

* ஆலிம்கள் அனைவருக்கும் ஆங்கிலம், கணினி உள்ளிட்ட கல்வியைப் போதிக்கப் பாடுபடுதல். 

* இஸ்லாமியச் சமுதாயத்தாரின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பாடுபடுதல்.