வியாழன், 22 அக்டோபர், 2009

கால்களை ஒடித்தோரை மன்னித்துவிட்ட மதானி


உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண் , மூக்குக்கு மூக்கு , காதுக்குக் காது , பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்கும் பழிவாங்கல் (அனுமதிக்கப்பட்டு) உள்ளது என அ(வர்களது வேதமான தவ்ராத்)தில் அவர்களுக்கு நாம் விதியாக்கினோம். ஆனால் , யார்  அவரை(ப் பழிவாங்காமல்) மன்னித்து விட்டுவிடுகிறாரோ அவரு(டைய பாவங்களு)க்கு அது பரிகாரமாகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்காதவர்களே அநீதி இழைத்தவர்கள் ஆவர்.  (05:45)

இறைநம்பிக்கை கொண்டோரே கொல்லப்பட்டோருக்காகப்  பழிவாங்கு(ம்போது நேர்மையோடு நடந்துகொள்)வது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. ஆகவே, (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்குப் பதிலாக ஒரு சுதந்திரமானவனும், ஓர் அடிமைக்குப் பதிலாக அடிமையும், ஒரு பெண்ணுக்குப் பதிலாகப் பெண்ணுமே (பழிவாங்கப்படுவர்). ஆனால், (கொலை செய்த) ஒருவருக்கு (கொலையுண்ட) அவருடைய சகோதர(ரின் உறவின)ரால் மன்னிப்பு ஏதேனும் வழங்கப்பட்டால், (கொலையுண்டவரின் உறவினர்) முறையோடு நடந்துகொள்வதும், அவருக்கு (மன்னிக்கப்பட்டவர்) சரியாக (இழப்பீட்டை)ச் செலுத்துவதும் கடமையாகும். இது உங்கள் ïரைவநிடமிருந்து (கிடைத்து)ள்ள சலுகையும் கருணையும் ஆகும். இதற்குப் பிறகும் ஒருவர் வரம்பு மீறினால் அவருக்கு வதைக்கும் வேதனை உண்டு. (02 ;179)

மேற்கண்ட இறைவசனத்தின் அடிப்படையில் `மன்னிப்பு` என்பதைத் தேர்ந்தெடுத்து, தம் கால்களை ஒடித்தோரை மன்னித்துவிட்ட மதானி அவர்களின் பெருந்தன்மையை நாம் போற்றுவோம்.

செவ்வாய், 20 அக்டோபர், 2009

அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுவோம்


நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?[2:107 ]

* நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்![7:194 ]
* அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள்.[16:20 ]
* மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது. இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமானவர்களே.[22:73 ]
* அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு அருளை நாடினால் (அதை உங்களுக்குத் தடை செய்பவர் யார்?) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.[33:17 ]
* நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;. யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.[4:48 ]

அறிவுடைய மக்களுக்கு அல்லாஹ்வின் வார்த்தைகளே போதுமானது.

படம் நன்றி;தினத்தந்தி

வியாழன், 8 அக்டோபர், 2009